May 01, 2017

தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும் யோகா பயிற்சி வருகிற (2017-2018) கல்வி ஆண்டு முதல் அமல் ஆகிறது. - தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தகவல்.



🔸 தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் மாநில அளவில் மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டிகள் திருச்சி மாவட்டம் தொட்டியத்தில் உள்ள கொங்குநாடு என்ஜினீயரிங் கல்லூரியில் நேற்று தொடங்கியது.

🔹கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு போட்டியை தொடங்கிவைத்தார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியவைகள்:

🔹 பிளஸ்-1 தேர்வை பொதுத்தேர்வாக மாற்ற அரசு பரிசீலித்து வருகிறது.

🔸 பிளஸ்-2, எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்ட தேதிகளில் நிச்சயம் வெளியிடப்படும்.

🔹 தொடக்கப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம்.

🔸 தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் மாணவ-மாணவிகளுக்கு யோகா பயிற்சி அளிக்க 13 ஆயிரம் பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. வருகிற கல்வி ஆண்டு முதல் அனைத்து பள்ளிகளிலும் யோகா பயிற்சி அமல் ஆகிறது.

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்