May 17, 2017

தமிழில் இலக்கண பிழைகள் இன்றி எழுதும் வகையிலும், தவறுகளை தானே சுட்டிக்காட்டி திருத்திக்கொள்ளும் வகையிலும், எழுத்துருக்களை மாற்றிக்கொள்ளும் வசதியுடன் ‘அம்மா மென்தமிழ்ச் சொல்லாளர்’ என்ற புதிய மென்பொருளை (சாப்ட்வேர்) தமிழக அரசு அறிமுகப்படுத்தி உள்ளது.




💽 தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி சென்னை தலைமைச் செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், ‘அம்மா மென்தமிழ்ச் சொல்லாளர்’ தமிழ் மென்பொருள் குறுந்தகட்டை வெளியிட்டார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

 💽 கம்ப்யூட்டரில் ஆங்கில மொழிக்கென பிழை திருத்தி, சொல் திருத்தி வசதிகள் இருப்பதை போல், தமிழில் இலக்கண பிழைகள் இன்றி எழுதும் வகையிலும், தவறுகளை தானே சுட்டிக்காட்டி திருத்திக்கொள்ளும் வகையிலும், எழுத்துருக்களை மாற்றிக்கொள்ளும் வசதியுடன் ‘அம்மா மென்தமிழ்ச் சொல்லாளர்’ என்ற புதிய மென்பொருள் (சாப்ட்வேர்) உருவாக்கப்பட்டு உள்ளது.

💽 இந்த மென்பொருள் ஒன்றின் விலை 300 ரூபாய் ஆகும்.

💽 இதனை அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் விலையில்லாமல் வழங்கும் திட்டத்தின் முதல்கட்டமாக, 30 லட்சம் ரூபாய் செலவில் 10 ஆயிரம் தமிழ் மென்பொருள் தமிழ் வளர்ச்சித் துறையால் அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் வழங்கப்பட உள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்