பல தனியார் பள்ளிகள் மாநில / மாவட்ட / பள்ளி அளவில் அதிக மதிப்பெண்களை பெற்றுள்ள மாணவர்களின் புகைப்படத்துடன் தகவல்களை விளம்பரம் செய்துள்ளனர்.
உதாரணமாக
🔹 1 பக்க அளவில் செய்திதாள் விளம்பரங்கள்,
🔹 கட்அவுட் (பிளக்ஸ்),
🔹 துண்டு பிரசுரங்கள்,
🔹 சில தொலைக்காட்சி சேனல்களும் அவர்களாகவே முதன்மை மதிப்பெண் பெற்ற மாணவர்களின் பேட்டியை இடம் பெற செய்தனர்,
🔹 சில நாளிதழ்கள் பள்ளியின் சாதனைகளை செய்திகளாக இடம் பெற செய்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொது தேர்வு கடந்த மார்ச் மாதம் நடந்து முடிந்தது.
இதையடுத்து கடந்த வாரம் பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியாது. பின்னர், 10ம் வகுப்பு தேர்வு முடிவு மே 19 ல் வெளியானது.
முன்னதாக பொது தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவ, மாணவிகளின் தர வரிசை பட்டியல் ரேங்க் முறையில்இருந்து, கிரேடு முறையில் மாற்றுவதாக தமிழக அரசு அறிவித்தது. அதன்படி மதிப்பெண் சதவீதத்தை பொறுத்து கிரேடு முறையும் அறிவிக்கப்பட்டது.
குறிப்பாக ரேங்க் பட்டியலை வெளியிட்டு, தனியார் பள்ளிகள் விளம்பரம் செய்வதை தடுக்கவே இந்த கிரேடு முறை கொண்டு வரப்பட்டதாக அரசு அறிவித்தது.
மாணவ, மாணவிகள் தரவரிசை பட்டியல் முதல், 2ம், 3ம் இடம் என விளம்பரம் செய்ய கூடாது என அரசு உத்தரவிட்ட பிறகும், தங்களது பள்ளிகள் குறித்த விளம்பரத்தை பல தனியார் பள்ளிகள் செய்து வருகின்றன.
விளம்பரம் செய்யும் தனியார் கல்வி நிறுவனங்கள் மீது மெட்ரிக் பள்ளி ஆய்வாளர், மாவட்ட ஆட்சியர், அரசு கல்வித்துறை ஆதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

No comments:
Post a Comment
குறிப்பு
1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..
அன்புடன்: கல்விக் கதிர்