May 07, 2017

இன்று (07.05.17) தமிழகத்தில் சென்னை, மதுரை உள்ளிட்ட 8 நகரங்களில் நீட் தேர்வுக்கான மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன, இதில் 88,478 பேர் தேர்வு எழுத உள்ளனர்.



மருத்துவ படிப்பில் சேர்வதற்கான தேசிய தகுதி மற்றும் நுழைவு தேர்வான நீட் தேர்வு இன்று (மே 07) நாடு முழுவதும் நடக்கிறது.

🔹 நாடு முழுவதிலும் 11 லட்சத்து 35 ஆயிரத்து 104 பேர் இந்த தேர்வை எழுதுகிறார்கள்.

🔸 நாடு முழுவதிலும் உள்ள 103 நகரங்களில் அமைக்கப்பட்டுள்ள 2204 தேர்வு மையங்களில் தேர்வு நடக்கிறது.

🔹 நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
 ஆனால் இதுவரை ஜனாதிபதி இதனை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளவில்லை.

🔸 இதனால் தமிழகத்திலும் இன்று நீட் தேர்வு நடக்கிறது.

🔹 தமிழகத்தில் சென்னை, மதுரை உள்ளிட்ட 8 நகரங்களில் நீட் தேர்வுக்கான மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

🔸 இதில் 88,478 பேர் தேர்வு எழுத உள்ளனர்.

🔹 காலை 10 மணிக்கு துவங்கும் தேர்வு பகல் 1 மணி வரை நடக்கிறது.

🔸 தேர்வு எழுத வரும் மாணவர்களுக்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்