April 27, 2017

TNPSC GROUP 2 மொத்த காலியிடங்கள் 1953 இது கடந்தமுறையை விட 90 அதிகமே. இதை நல்ல வாய்ப்பாக பயன்படுத்திக்கொள்ளுங்கள்..



டி.என்.பி.எஸ்.சி நேர்முகத்தேர்வு அல்லாத குரூப்-2 பணிக்கான அறிவிப்பு வெளியாகிவுள்ளது.



மொத்த காலியிடங்கள் 1953
இது கடந்தமுறையை விட 90 அதிகமே. இதை நல்ல வாய்ப்பாக பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

தேர்வுக்கு சரியாக 100 நாட்களே உள்ளன. இவை நம் வாழ்க்கையை மாற்றக்கூடிய நல்ல தினங்களாக பயன்படுத்துங்கள்.

மேலும் இதில்
எழுத்துத்தேர்வில் தேர்ச்சி பெற்றாலே போதுமானது. தற்போது தமிழகத்தில் நிலவும் அசாதாரண அரசியல் சூழல் போட்டியாளர்களுக்கு கூடுதல் பலமாகும்.
தேர்வுக்கு படிக்கத் தொடங்கும்முன் பாடத்திட்டத்தை ஒருமுறை முழுமையாக படிப்பது நல்லது.
பொதுத்தமிழ்
கணிதம்
நடப்புநிகழ்வுகள்.
இவைமூன்றையும் மிக நன்றாக படித்தால் நல்லது. ஆனால் தற்போது உங்கள் போட்டியாளர்களை முந்திச்செல்ல வேண்டுமெனில் கூடுதலாக பொது அறிவு பாடப்பகுதியில் மூன்றுக்கு மேற்பட்ட பிரிவுகளை மிக நன்றாகவும் இதர பிரிவுகளை ஓரளவு படித்தாக வேண்டும்.
தயவுசெய்து படிக்க தொடங்கும்முன்னரே கட்-ஆப் மதிப்பெண்களை கணக்கில் கொள்ள வேண்டாம். உங்கள் இலக்கு -185 கேள்விகளுக்கு மேல் சரியாக பதிலளிக்க வேண்டும்.

நடப்பு நிகழ்வுகளை கடைசியாக படிப்பதைவிட அன்றாடம் படித்து வருவது நல்லது. (மார்ச் முதல் ஜூலை வரை போதுமானது)
இந்த தேர்வை பொருத்தவரை கேள்விகள் எளிதாக தோன்றினாலும் சிறிது கடினமாகவே இருக்கும். ஆகையால், படிப்பதை மிகத் தெளிவாக படிக்கவேண்டும்.
இந்த தேர்வுக்கென தனி மிஷன் ஒன்றை தொடங்குங்கள். முழு கவனத்தையும் அதன்மீதே செலுத்துங்கள்.. வெற்றி நமதே!
வாழ்த்த்துகளுடன் ....
#பல_வேடிக்கை_மனிதரைப் போல - நான்
#வீழ்வெ_னென்று_நினைத்_தாயோ?

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்