April 18, 2017

Breaking News: கோடை வெயில் காரணமாக அரசு பள்ளிகளுக்கு முன்கூட்டியே (ஏப்ரல் 21 முதல்) விடுமுறை - தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தகவல்.














சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது! தனியார் பள்ளிகளுக்கு அமைச்சர் செங்கோட்டையன் எச்சரிக்கை

பள்ளிகளுக்கு வருகின்ற 21-ம் தேதி முதல் விடுமுறை அளிக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.


தமிழகத்தில் நாளுக்கு, நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது.

 சென்னை, மதுரை, திருச்சி, வேலூர், சேலம், கரூர், ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில் 100 பாரன்ஹீட் அளவுக்கு வெயில் சுட்டெறித்து வருகிறது. குறிப்பாக, சென்னையில் நேற்று 106 பாரன்ஹீட் வெப்பம் பதிவானது.

இன்று 18 மாவட்டங்களில் அனல் காற்று வீசும் என்று தேசிய பேரிடர் மேலாண்மை எச்சரிக்கை விடுத்தது.

இந்நிலையில், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் கூறுகையில், "தமிழகத்தில் உள்ள பள்ளிகளுக்கு வருகின்ற 21-ம் தேதி முதல் விடுமுறை விடப்படும்.

 அனல் காற்று வீசுவதால், பள்ளிகளுக்கு முன் கூட்டியே விடுமுறை அளிக்கப்படுகிறது.

 தொடக்கப்பள்ளி தேர்வுகளை, மாற்றியமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஏப்ரல் 21-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை நடைபெற இருக்கும் தேர்வுகளுக்கு, மாற்று தேதி அறிவிக்கப்படும்.

குறிப்பாக, தனியார் பள்ளிகள் சிறப்பு வகுப்புகளை நடத்தக் கூடாது. சிறப்பு வகுப்புகளை தனியார் பள்ளிகள் தவிர்க்க வேண்டும்" என்றார்.

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்