April 18, 2017

விரைவில் புதிய கல்வி கொள்கை : மத்திய அமைச்சர் ஜாவடேகர் உறுதி

''புதிய கல்விக் கொள்கையை இறுதி செய்வதற்கான நிபுணர் குழு நியமிக்கப்பட்டு, விரைவில் கல்விக் கொள்கை அறிவிக்கப்படும்,'' என, மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் தெரிவித்தார்.



மாநில உயர் கல்வி திட்டங்கள் குறித்து அறிந்து கொள்ளும் வகையில், புதிய, 'மொபைல் ஆப்' அறிமுகம் செய்யும் நிகழ்ச்சி, டில்லியில் நேற்று நடந்தது.

இதில் பங்கேற்ற மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான பிரகாஷ் ஜாவடேகர் கூறியதாவது: புதிய கல்விக் கொள்கை குறித்து, பல்வேறு தரப்பினரிடம் இருந்து கருத்துக்கள், ஆலோசனைகள், பரிந்துரைகள் நுாற்றுக்கணக்கில் வந்துள்ளன. இவற்றை ஆராய்ந்து, புதிய கல்விக் கொள்கையை உருவாக்க, ஒரு நிபுணர் குழு அமைக்கப்பட உள்ளது. மிக விரையில், புதிய கல்விக் கொள்கை அறிவிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

'ரூசா' எனப்படும் தேசிய உயர்கல்வி இயக்கத்தின் கீழ் உருவாக்கப்பட்டுள்ள, இந்த புதிய மொபைல் ஆப்பில், மாநில கல்வி திட்டங்கள், கொள்கைகள், மாநில உயர்கல்வி கவுன்சிலின்
முடிவுகள், ரூசா திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் வசதிகள் உள்ளிட்டவை குறித்து தெரிந்து கொள்ளலாம்.ரூபா திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட, கோவை பாரதியார் பல்கலை, மகளிர் விடுதி உள்ளிட்டவற்றை, 'வீடியோ கான்பரன்ஸ்' மூலம், ஜாவடேகர் திறந்து வைத்தார்.

ரூசா திட்டத்தின் கீழ், இந்த விடுதி கட்டுவதற்கு, ரூசா நிதி தொகுப்பில் இருந்து, 2.5 கோடி ரூபாய் வழங்கப்பட்டது; மாநில அரசு, 2.5 கோடி ரூபாய் செலவிட்டது.

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்