April 05, 2017

குறைந்த கட்டணத்தில் டி.டி.ஹெச் சேவை.. ஜியோவின் அடுத்த அதிரடி திட்டம்.



🔸 கடந்த 6 மாதங்களாக இலவச இணையதள சேவைகளை வழங்கி வந்த ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தற்போது செட் டாப் பாக்ஸ்கள் மூலம் குறைந்த செலவிலான டிடிஎச் சேவை அளிக்கவும் திட்டமிட்டுள்ளது.



🔹 ரிலையன்ஸ் நிறுவனம் கடந்த 2005-ஆம் ஆண்டுகளில் புதிய செல்போன்களையும், செல்போன் சேவைகளையும் குறைந்த விலையில் வழங்கி வந்தது.
🔸 இந்நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் இலவச கால் சேவைகளையும், டேட்டா வசதிகளையும் தொடங்கியது.

🔹 இந்நிலையில் வாடிக்கையாளர்களை கவர்வதற்காகவும், இணையதள சேவையை சோதிப்பதற்காகவும் முதல் 3 மாதங்களுக்கு அனைத்து சேவைகளையும் இலவசமாக வழங்கப்பட்டது.

🔸 இதைத் தொடர்ந்து வாடிக்கையாளர்கள் பெருமளவில் பயன்படுத்தத் தொடங்கியதை தொடர்ந்து மேலும் 3 மாதங்களுக்கு இலவசங்கள் நீட்டிக்கப்பட்டது.

🔹 அது முடிவடைந்த நிலையில் குறைந்த டாஃரீப் ரேட்டுகள் கொண்ட ஜியோ பிரைம் திட்டத்தை தொடங்கியது.

🔸  இந்நிலையில் ரிலையன்ஸ் ஜியோ என்ற பெயரிலான செட்-டாப் பாக்ஸ்கள் கடந்த பிப்ரவரி மாதம் வெளியாகியுள்ளன.

🔹 இதனால் டிடிஎச் சேவைகளிலும் கால்பதிக்க ரிலையன்ஸ் முடிவு செய்துள்ளது.

🔸 அதாவது 360-க்கும் மேற்பட்ட சேனல்களை செட் டாப் பாக்ஸ் மூலம் வழங்க ஜியோ திட்டமிட்டுள்ளது.

🔹  அவற்றுள் 50 சானல்கள் ஹெச்.டி. சானல்களாகும். இவற்றை குறைந்த அளவில் வழங்க முடிவு செய்துள்ளதாகவும் தெரிகிறது.

🔸 ஏற்கெனவே இலவசமாகவும், குறைந்த செலவிலும் வாய்ஸ் கால்களையும், டேட்டாக்களை வழங்கியுள்ளதால் தங்கள் வர்த்தம் பாதிக்கப்படுவதாக வோடஃபோன் நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்