April 15, 2017

மே மாதம் வகுப்பு நடத்தினால் நடவடிக்கை தனியார் பள்ளிகளுக்கு எச்சரிக்கை..

கோடை விடுமுறையில் மே மாதம் வகுப்பு நடத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என தனியார் பள்ளிகளுக்கு கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தில் இந்த கல்வியாண்டு ஏப்ரல் 30ம் தேதியுடன் நிறைவடைகிறது. உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளுக்கு முன்கூட்டியே விடுமுறை
அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வரும் கல்வியாண்டில் தேர்ச்சி விகிதம் அதிகரிக்க, பெரும்பாலான தனியார் பள்ளிகள், மே மாதம் வகுப்புகள் நடத்த திட்டமிட்டுள்ளன. தொடர்ந்து, சில பள்ளிகளில் பிளஸ்2 மற்றும் பத்தாம் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் சமீப நாட்களாக, கோடை வெயில் கொளுத்துவதால், அனைத்து தரப்பு மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதை கருத்தில்கொண்டு, கல்வித்துறை மே மாதம் வகுப்புகள் நடத்தக்கூடாது என தனியார் பள்ளிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. இதனை கண்காணிக்க, மாவட்ட மெட்ரிக் பள்ளி ஆய்வாளர்க்கு உத்தரவிடப்பட்டுள்ளது. எச்சரிக்கை மீறி வகுப்புகள் நடத்தினால், சம்மந்தப்பட்ட பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் ஆய்வாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்