April 21, 2017

எந்த பள்ளியும் கோடை விடுமுறையில், சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது' என, பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் எச்சரித்துள்ளார்.



அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு, இன்று தேர்வுகள் முடிந்து, நாளை முதல் கோடை விடுமுறை விடப்படுகிறது.


 சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு, ஏப்ரல் 28ல், புதிய கல்வி ஆண்டுக்கான கோடை வகுப்புகள் முடிந்து, 29 முதல் விடுமுறை விடப்படுகிறது.

இந்நிலையில், பல தனியார் பள்ளிகள், சி.பி.எஸ்.இ., பள்ளிகள், கோடையில் சிறப்பு வகுப்புகள் நடத்த துவங்கியுள்ளன.

சில பள்ளிகள், மதம் சார்ந்த வகுப்புகளும், சில பள்ளிகள், பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்புகளுக்கு, சிறப்பு வகுப்பும் நடத்துகின்றன.

இதையடுத்து, 'எந்த பள்ளியும் கோடை விடுமுறையில், சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது' என, பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் எச்சரித்துள்ளார்.

இது குறித்து, அனைத்து முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்