🔸வங்கி கணக்குகளில் ஆதார் மற்றும் பான் எண் இணைக்க வேண்டும் என மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது.
🔹 இந்நிலையில், அமெரிக்கா இந்தியா இடையே எப்ஏடிசிஏ சட்டம் தொடர்பாக ஒப்பந்தம் கையெழுத்தானது.
🔸 இதன்படி 2014ம் ஆண்டு ஜூலை 1ம் தேதி முதல் 2015 ஆகஸ்ட் 31ம் தேதி வரை வங்கி கணக்கு துவக்கியவர்கள், சம்பந்தப்பட்ட வங்கி மற்றும் நிதி நிறுவனங்களிடம் உங்கள் வாடிக்கையாளரை தெரிந்து கொள்ளுங்கள் (கேஒய்சி) படிவத்தை பூர்த்தி செய்து, சுய சான்றளிப்புடன் ஆதார் எண்ணை சமர்ப்பிக்க வேண்டும்.
🔹 எனவே, மேற்கண்ட கால கட்டத்தில் கணக்கு துவக்கிய தனிநபர் மற்றும் நிறுவனங்களிடம் சுய சான்றளிப்பை பெற வேண்டும் என்று வருமான வரித்துறை அறிவுறுத்தியுள்ளது.
🔸 அவ்வாறு விவரங்களை சமர்ப்பிக்காத கணக்குகளை முடக்க வேண்டும்.
🔹 வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள், பங்குச்சந்தை கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்களுக்கும் ஆதார் சமர்ப்பிக்கும் நடைமுறை பொருந்தும் என வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment
குறிப்பு
1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..
அன்புடன்: கல்விக் கதிர்