April 26, 2017

TNTET 2017 - தேர்ச்சிக்கான வழிகளும்; தேர்வு அறையும்... (2 நாட்களுக்கான திட்டமிடலுடன் தன்னம்பிக்கை கட்டுரை ஆக்கம்: Mr. பிரதீப்)


🔸  இடை விடாமல் படித்து வரும் நண்பர்களுக்கு வெற்றி சூட வாழ்த்துகள்.

🌺 இருக்க கூடிய இரண்டு நாட்களில் செய்ய வேண்டியவை:

🔸 மறதி, பதற்றம் இரண்டும் தேவை அற்றவை. எனவே அவற்றை தவிர்க்கவும்.

🔸 படித்தவை தேவையான அளவில் தேர்வு நேரத்தில் நிச்சயம் நினைவிற்கு வரும்.


🔸 எதிர் வரும் இரண்டு நாட்கள் அனைத்து பாட பகுதியும் மீள் திருப்புதல் செய்யவும்.

🔸 இனி இருக்கும் நாட்களில் மாதிரி தேர்வை குறைத்துக் கொள்ளவும்.

🌺 தேர்வு நாளின் முந்தைய நாள்:

🔹 இரவு முழுவதும் படிப்பது தேர்வை பாதிக்கும். நன்றாக உறங்கவும்.

🔹 பயம் காரணமாக உறக்கம் தடைபடும். மனதை நிலைபடுத்தி உறங்குங்கள்.

🌺 தேர்விற்கு முன்பாக:

🔸 காலையில் விரைவாக விழியுங்கள்.

🔸 மனம் நம்பிக்கை தரும் பிராத்தனையுடன் அமைதியுடன் தேர்வு பகுதிக்கு செல்லவும்.

🔸 செல்லும் போது ஹால் டிக்கெட், புளு - 1 , பிளாக் - 1 பால் பாயிண்ட் பேனா இவை மட்டும் போதும்.

🔸 அருகில் தேர்வு மையம் இருப்போர் செல்போன் கொண்டு செல்வதை தவிர்க்கலாம்.

🔸 அங்கு கண்டிபாக மற்ற தேர்வர்கள் புத்தக குவியல் கொண்டு தீவிரமாக படிப்பர். அவர்களை கண்டு பதற்றம் வேண்டாம். தவறான அணுகுமுறை இது. இறுதி நேர படிப்பு அனைத்தையும் மறக்க செய்யும்.

🔸 சிறு முக்கிய குறிப்புகள் இருப்பின் அவற்றை ஒரு மீள் பார்வை செய்யலாம்.
அமைதியாக மன மீள் பார்வை சிறப்பானது.

🔸தேர்வு மையத்துக்கு காலை 9 மணிக்குள் செல்லவும்.

🔸 புதிதாக பிரிஸ்கிங் செக்கிங் உள்ளதால் முன்னதாக தேர்வறைக்கு அழைக்கபடுவீர்.

🔸 டிஜிடல் வாட்ச், செல்போன் மறந்தும் கொண்டு செல்லாதீர்கள்.

🔸 9.40 தேர்வு அறைக்கு செல்லும் நேரம்.

👍 தேர்வறை:

🔹சரியான நேரத்தில் தேர்வறை செல்லவும்.

🔹 OMR தாளினை மிக மெதுவாக பதற்றம் இன்றி நிரப்புங்கள். தவறினை உண்டாக்கி உங்களை பதற்ற படுத்தி தேர்வு துவங்க வேண்டாம்.

🏆 தேர்வின் போது:

🔸 உங்கள் பல மாத உழைப்பை 3 மணி நேரத்தில் நேர்த்தியாக வழங்க வேண்டும்.

🔸 பதற்றம் வேண்டாம்.

🔸 கேள்விகளை தெளிவாக வாசியுங்கள்.

🔸 சிந்தித்து விடையளியுங்கள்.

🔸 எப்பகுதி முதலில் - பின்னர் - கடைசி என முடிவெடுத்து தேர்வு எழுதவும்.

🔸 கணிதம் கூடுதல் நேரம் தேவைபடும் பாடம். இதற்கு மற்ற பாடத்தில் நேர மிச்சம் செய்யவும்.

🔸 பொதுவாக செய்யும் தவறு  கேள்வி  மாற்றி விடையளிப்பது. ஒவ்வொரு மதிப்பெண்ணும் மிக அவசியம். சரியாக விடை வட்டமிடவும்.

🔸 தெரியாத வினாக்களில் நின்று இருக்காமல் அடுத்த கேள்வி செல்லவும்.

🔸 இறுதியில் அனைத்து கேள்விகளும் பதில் அளிக்க பட்டதா என சரி பார்க்கவும்.

🔸 வார்னிங் மணி அடிக்கையில் ஒரு முறை சரிபார்த்து இறுதியில் உங்கள் கார்பன் நகல் விடைத்தாளை பெற்று வெளியேறவும்.

🔹 தாள் 1 முடித்தவர் அதை நினைத்து உணர்ச்சி வச படமால் தாள் 2 நோக்கி செல்லவும்.

🔸 அரசு விடை குறிப்பு மட்டுமே இறுதியானது. தனியாரது குறிப்பு விட + or - 10 என கொள்ளலாம். எனவே பயம் வேண்டாம்.

🔸 துல்லியம், விரைவுத்தன்மை, கவனம் இவை கொண்டு வெற்றி பெறுவோம்.

👍 வாழ்த்துகளுடன் - தேன்கூடு (பிரதீப்) 🏆


Thanks to 🙏

Mr. பிரதீப்,
பட்டதாரி ஆசிரியர் (கணிதம்)
பூங்குளம்,
வேலூர் மாவட்டம்.

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்