April 14, 2017

மே 21ல் போலீஸ் தேர்வு : 6.50 லட்சம் பேர் பங்கேற்பு.

மே 21ல் நடக்கும் சீருடைப் பணியாளர் எழுத்து தேர்வில் தமிழகம் முழுவதுமிருந்து 6.50 லட்சம் பேர் பங்கேற்கின்றனர். தமிழக போலீசில் இரண்டாம் நிலை போலீசார், சிறைத் துறையில் இரண்டாம் நிலை சிறைக் காவலர், தீயணைப்புத் துறையில் தீயணைப்பு

வீரர் என 15,664 காலிப் பணியிடங்கள் உள்ளன.

இப்பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் எழுத்து தேர்வு நடத்துகிறது. மே 21ல் நடக்கும் எழுத்து தேர்வில் 6.50 லட்சம் பேர் பங்கேற்கின்றனர். அதிகபட்சமாக சென்னையில் 47,400, மிகக்குறைவாக நீலகிரி, பெரம்பலுார் மாவட்டங்களில் தலா 4,000 பேர் பங்கேற்கின்றனர். தென் மாவட்டங்களில் மதுரையில் 43,300, திருநெல்வேலியில் 34,000, திண்டுக்கல்லில் 22,000, விருதுநகரில் 29,000, கன்னியாகுமரியில் 20,000, தேனியில் 19,000, துாத்துக்குடியில் 16,000, ராமநாதபுரத்தில் 15,000, சிவகங்கையில் 12,000 பேர் எழுதவுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் 15,000 பேர் பங்கேற்பது இதுவே முதல் முறை.

விண்ணப்பதாரர்கள் எவ்வித சிரமமின்றி தேர்வெழுத முதல் முறையாக மேஜை, நாற்காலி வசதி செய்து கொடுக்கப்படுகிறது. மின்சாரம், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கொண்ட தேர்வு மையங்களை 32 மாவட்டங்களிலும் கண்டறியும் முதற்கட்ட பணியில் உயர் போலீஸ் அதிகாரிகள் தலைமையில் குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்