April 02, 2017

கள்ள நோட்டுகளை ஒழிக்க தற்போது புழக்கத்தில் உள்ள புதிய ரூ.2,000 மற்றும் ரூ. 500 நோட்டுகளில் 3 அல்லது 4 வருடங்களுக்கு ஒரு முறை பாதுகாப்பு அம்சங்களை மாற்றியமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.





 கள்ள நோட்டுகள்: 

💵 ரூ. 500, ரூ 1,000 ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்பட்ட பிறகு புதிதாக ரூ.2,000 மற்றும் 500 நோட்டுகள் வெளியிடப்பட்டன.

💷 கடந்த சில நாட்களாக அதிகளவு கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.



💴 புதிய ரூ.2,000 நோட்டுகளில் உள்ள 17 பாதுகாப்பு அம்சங்களில் 11 அம்சங்கள் கள்ளநோட்டில் இடம்பெற்றன.

💶 புதிய நோட்டில் இடம்பெற்ற வாட்டர்மார்க், அசோகா பில்லர் சின்னம், 2000 எழுத்து, உறுதிமொழி, ரிசர்வ் வங்கி கவர்னர் கையெழுத்து, தேவநாகிரி எழுத்து ஆகியவை கள்ள நோட்டில் இடம்பெற்றுள்ளன.

💵 இது குறித்து மத்திய உள்துறை செயலாளர் ராஜிவ் மெஹ்ரிஷி தலைமையில் நிதித்துறை மற்றும் உள்துறை அதிகாரிகள் கூட்டம் நடந்தது.

💷 இந்த கூட்டத்தில், கள்ள நோட்டுகளை ஒழிக்க ஒவ்வொரு 3 அல்லது 4 வருடங்களுக்கு ஒரு முறை ரூபாய் நோட்டுகளில் மாற்றம் செய்வது என முடிவு செய்யப்பட்டது.

💴 பழைய ரூபாய் ஆயிரம் நோட்டுகள் அறிமுகபடுத்தப்பட்டது முதல் வாபஸ்பெறப்படும் வரையில், அதில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை.

💶 1987 ல் பழைய ரூ.500 நோட்டுகள் வெளியிட்ட பின்னர், 10 வருடங்கள் கழித்து தான் சிறிய மாற்றம் செய்யப்பட்டது.

 இது குறித்து அதிகாரி ஒருவர் கூறியதாவது:

🔹 ரூபாய் நோட்டுகளில் மாற்றம் செய்வது என்பது கள்ள நோட்டுகளை ஒழிக்க பெரிதும் உதவும்.

🔸 சமீபத்தில் பிடிபடும் கள்ள நோட்டுகளுடன் பிடிபடும் நபர்கள் விசாரணையின் போது, அவர்கள் கள்ள நோட்டுகள் அனைத்தும் பாகிஸ்தானில் ஐ.எஸ்.ஐ., உதவியுடன் அச்சடிக்கப்படுவதாக கூறுகின்றனர்.

🔹 அந்த நோட்டுகள் வங்கதேசம் வழியாக கொண்டு வரப்படுவதாகவும் கூறுகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.


No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்