April 27, 2017

தமிழக அரசு ஊழியர்கள் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் - அமைச்சர்களுடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு.



3 தமிழக அமைச்சர்களுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டியதையடுத்து தமிழக அரசு ஊழியர்களின் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது.


ஊதியக்குழு பரிந்துரையை அமல்படுத்த வேண்டும், 20% இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 61 துறைகளை சேர்ந்த அரசு துறை ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

மே 2 ஆம் தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டமும் நடைபெறும் எனவும் அரசு ஊழியர் சங்க தலைவர் சுப்பிரமணி தெரிவித்திருந்தார்.

இதையடுத்து தமிழக அரசு தங்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தாவிட்டால் அடுத்த கட்ட போராட்டத்தை தொடருவோம் என அரசு ஊழியர்கள் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.

இந்நிலையில், நேற்று (26.04.17) அமைச்சர்கள் செங்கோட்டையன், ஜெயகுமார், உதயகுமார் ஆகியோருடன் அரசு ஊழியர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
அதில், அரசு ஊழியர் சங்கத்தின் 6 கோரிக்கைகளை வரும் ஜூலை இறுதிக்குள் நிறைவேற்றுவதாக அரசு உறுதியளித்துள்ளது.

இதைதொடர்ந்து அரசு ஊழியர்களின் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக முடிவு செய்யப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்