வண்ண சுழல் விளக்குகளை, முக்கிய பிரமுகர்களின் வாகனங்களில் பொருத்துவது தொடர்பாக, மத்திய மோட்டார் வாகன சட்டத்தில், மே, 1 முதல், திருத்தங்கள் கொண்டு வரப்பட உள்ளன.
அதன் அடிப்படையில், பிரதமர் நரேந்திர மோடி, தன் வாகனத்தில் இருந்த வண்ண சுழல் விளக்கை, அகற்றினார்.
அதை தொடர்ந்து, தமிழகத்தில் உள்ள அரசு வாகனங்களில், வண்ண சுழல் விளக்குகளை அகற்றுவதற்கு முன்னோடியாக, தலைமை செயலகத்தில், முதல்வர் பழனிசாமி, தன் அரசு வாகனத்தில் பொருத்தப்பட்டு இருந்த, சிவப்பு வண்ண சுழல் விளக்கை, தானே அகற்றினார்.
முதல்வர் கூறியதாவது: அமைச்சர்களும், தங்களின் கார்களில் உள்ள, சுழல் விளக்குகளை அகற்றிவிடுவர்.
உயரதிகாரிகள் கார்களிலும், சுழல் விளக்குகள் அகற்றப்படும் என்றார்.



No comments:
Post a Comment
குறிப்பு
1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..
அன்புடன்: கல்விக் கதிர்