🔸 ஆய்வக உதவியாளர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கான கலந்தாய்வு இன்று (17.04.17) திங்கள்கிழமை நடைபெறவுள்ளது.
🔹 அதைத் தொடர்ந்து பணி நியமன ஆணை வழங்கப்படவுள்ளது.
🔸 இது குறித்து கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அருள்முருகன் கூறியதாவது:
🔬 தமிழகத்தில் உள்ள அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள ஆய்வக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப நடத்தப்பட்ட தேர்வு முடிவுகள் கடந்த மார்ச் மாதம் 23-ஆம் தேதி வெளியிடப்பட்டது.
🔬 இதற்காக எழுத்துத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மதிப்பெண்கள் அடிப்படையில், தற்போது நடைமுறையில் உள்ள மகளிர், ஆதரவற்ற விதவை, முன்னாள் ராணுவத்தினர், மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு இட ஒதுக்கீடு, தமிழ் வழியில் பயின்றோருக்கான ஒதுக்கீடு மற்றும் முன்னுரிமை பெற்றவர்களுக்கும், முன்னுரிமையற்றோருக்கும் இடையேயான 1:4 என்ற விகிதாச்சாரம் ஆகியவை இனசுழற்சி முறையுடன் கடைபிடித்து இறுதி பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது.
🔬 இந்த பட்டியல் கோவை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம், மாவட்ட கல்வி அலுவலகம் ஆகிய இடங்களில் ஒட்டப்பட்டுள்ளது.
🔬 தேர்வு செய்யப்பட்டோருக்கான பணி நியமன ஆணைகள் வழங்குவதற்கான கலந்தாய்வு வருகிற 17-ஆம் தேதி காலை 10 மணிக்கு ஆர்.எஸ்.புரத்தில் உள்ள ஸ்ரீ நேரு வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறுகிறது.
🔬 அதைத் தொடர்ந்து திங்கள் அல்லது செவ்வாய்க்கிழமை பணி நியமன ஆணை வழங்கப்படும் என்றார்.
No comments:
Post a Comment
குறிப்பு
1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..
அன்புடன்: கல்விக் கதிர்