April 19, 2017

மே-14 முதல் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பெட்ரோல் பங்குகளுக்கு இனி ஞாயிறு தோறும் விடுமுறை.



🔸மே மாதம் 14-ஆம் தேதி முதல் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையங்களுக்கு ஞாயிற்றுக் கிழமை விடுமுறை நாளாக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


🔹 இது தொடர்பாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பெட்ரோல் விற்பனை நிலையங்களின் உரிமையாளர்கள் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை விபரம் வருமாறு:

🔸 அடுத்த மாதம் 14-ஆம் தேதி முதல் தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரியில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையங்களுக்கு ஞாயிற்றுக் கிழமை விடுமுறை நாளாக இருக்கும்.

🔹 மத்திய அரசின் வேண்டுகோளை ஏற்றே இந்த முடிவை எங்கள் அமைப்பு எடுத்திருக்கிறது.

🔸 இதற்கு முன்னர் தெலுங்கானா, ஆந்திரா, கர்நாடகா மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையங்களுக்கு ஞாயிற்றுக் கிழமை விடுமுறை நாளாக இருக்கிறது.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்