April 10, 2017

தமிழகத்தில் 1,200 அரசுப்பள்ளிகள் மூடப்படும் அபாயம்.


தமிழகத்தில், 20க்கும் குறைவாக, மாணவர்கள் படிக்கும், 1,200 தொடக்கப்பள்ளிகள் மூட திட்ட மிடப்பட்டுள்ளதாக, புகார் எழுந்துள்ளது.

தமிழகத்தில், 36 ஆயிரம் அரசு, அரசு உதவிபெறும் தொடக்க, நடுநிலைப்பள்ளிகள் உள்ளன.

  இதில், 19 ஆயிரம் பள்ளிகளில், இரண்டு ஆசிரியர்கள் மட்டுமே பணி புரிகின்றனர்.

அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை சரிய, தனியார் பள்ளிகளின் ஆதிக்கமே காரணம் என, கல்வியாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

.கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, ஒரு கி.மீ., இடைவெளிக்குள், தொடக்கப்பள்ளிகள், 3 கி.மீ., இடைவெளிக்குள் நடுநிலைப்பள்ளிகள் புதிதாக துவங்க கூடாது. ஆனால், புற்றீசல் போல, அருகருகே தனியார் பள்ளிகள் துவங்கப்பட்டுள்ளன.

 இதனால், அரசு பள்ளிகளில் சேரும் மாணவர் எண்ணிக்கை சரிந்தது.இதை காரணம் காட்டி, அரசுப்பள்ளிகளுக்கு மூடுவிழா காண, தொடக்க கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.

 நடப்பு கல்வியாண்டு துவக்கத்தில், பத்துக்கும் குறைவாகமாணவர்கள் படிக்கும், 1,200 பள்ளிகளின், பட்டியல் தயார் செய்யப்பட்டது.

இப்பள்ளிகளுக்கு, அடுத்த கல்வியாண்டில், மாணவர் சேர்க்கையை அதிகரிப்பது தொடர்பாக, உத்தரவு பிறப்பிக்காததால், பள்ளிகளை மூட, முடிவு செய்யப்பட்டுள்ளதாக தலைமையாசிரியர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் சங்க மாநில தலைவர் மோசஸ் கூறுகையில்,''நடப்பு கல்வியாண்டில், மாணவர் சேர்க்கை அதிகரிப்பது தொடர்பாக, பள்ளிகளுக்கு எவ்வித உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை.

அடுத்த கல்வியாண்டில், மாணவர் சேர்க்கை சரிந்தால், சத்தமின்றி 1,200 பள்ளி கள் மூடப்படலாம்,'' என்றார்.

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்