March 02, 2017

TNTET 2017 - தேனி மாவட்டத்தில் TNTET விண்ணப்பங்கள் 16 பள்ளிகளில் விற்பனை செய்யப்பட உள்ளது.


தேனி மாவட்டத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு மார்ச் 6-ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை, 16 இடங்களில் விண்ணப்ப படிவம் விநியோகம் செய்யப்படுகிறது.


இது குறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் எம்.வாசு வெளியிட்டுள்ள அறிவிப்பு:

 ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 1 வரும் ஏப்.29-ஆம் தேதியும், தாள் 2 வரும் ஏப்.30-ஆம் தேதியும் நடைபெற உள்ளது.

இந்தத் தேர்வுக்கான விண்ணப்ப படிவம்

பெரியகுளம் தென்கரை எட்வர்டு நடுநிலைப் பள்ளி,
 வடகரை 3-ஆவது வார்டு நகராட்சி நடுநிலைப் பள்ளி,
தேனி என்.ஏ.கொண்டுராஜா நினைவு உயர்நிலைப் பள்ளி,
ஆர்.சி.உயர்நிலைப் பள்ளி, ஆண்டிபட்டி எஸ்.கே.ஏ.மேல்நிலைப் பள்ளி, ஜக்கம்பட்டி முத்துமாரியம்மன் நகர் அரசு உயர்நிலைப் பள்ளி,
 மயிலாடும்பாறை அரசு உயர்நிலைப் பள்ளி, ராஜேந்திரநகர் அரசு மேல்நிலைப் பள்ளி,
 போடி 7-ஆவது வார்டு நகராட்சி மேல்நிலைப் பள்ளி,
ஜ.கா.நி.மெட்ரிக் பள்ளி, கம்பம் முகைதீன் ஆண்டவர்புரம் நகராட்சி பெண்கள் உயர்நிலைப் பள்ளி,
 உத்தமபுரம் அரசு கள்ளர் மேல்நிலைப் பள்ளி, உத்தமபாளையம் ஸ்ரீஅரவிந்தர் பாலா மெட்ரிக் பள்ளி,
பண்ணைப்புரம் அரசு மேல்நிலைப் பள்ளி, சின்னமனூர் ஸ்ரீகிருஷ்ணய்யர் மேல்நிலைப் பள்ளி,
மார்கைகயன்கோட்டை அரசு கள்ளர் மேல்நிலைப் பள்ளி ஆகிய இடங்களில் விநியோகம் செய்யப்படுகிறது.

தாள் 1, தாள் 2 ஆகிய 2 தேர்வுகளையும் எழுத விரும்புவோர், ஒவ்வொரு தேர்வுக்கும் தனித் தனியாக விண்ணப்பிக்க வேண்டும்.

 பூர்த்தி செய்த விண்ணப்பங்களை பெரியகுளம் மாவட்ட கல்வி அலுவலகம், உத்தமபாளையம் மாவட்ட கல்வி அலுவலகம் ஆகிய இடங்களில் மார்ச் 23-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்