March 12, 2017

TNTET 2017 - ஆசிரியர் தகுதித் தேர்வு விண்ணப்பங்கள் 5 நாளில் 3 லட்சம் விற்பனை.


TNTET 2017 - ஆசிரியர் தகுதித் தேர்வுகள்  ஏப்ரல் 29 மற்றும் 30ம் தேதிகளில் நடைபெற உள்ள நிலையில் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதுவதற்கு 5 நாட்களில் 3 லட்சம் பேர் விண்ணப்பம் பெற்றுள்ளனர்.

 தமிழக அரசு சார்பில் ஆசிரியர் தகுதித் தேர்வு வருகிற ஏப். 29, 30ம் தேதிகளில் நடைபெறுகிறது.



 முதல் தாள் மற்றும் இரண்டாம் தாள் என தனித்தனியாக தேர்வுகள் நடத்தப்படுகின்றன.

 இத்தேர்வை சுமார் 8 லட்சம் முதல் 10 லட்சம் பேர் எழுதுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

 இதற்கான விண்ணப்பங்கள் கடந்த 6ம்தேதி முதல் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.

விண்ணப்ப கட்டணம் ரூ.50. அனைத்து மையங்களிலும் தினமும் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் வந்து விண்ணப்பங்களைப் பெற்றுச் செல்கின்றனர்.

கடந்த 5 நாட்களில் சுமார் 3 லட்சம் பேர் விண்ணப்பங்களை பெற்றுள்ளனர்.

மேலும் 10 நாட்கள் தொடர்ந்து விண்ணப்பங்கள் வழங்கப்பட உள்ளதால் இந்த எண்ணிக்கை 8 லட்சத்தை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பால் பாயிண்ட் பேனாவால் விண்ணப்பம் நிரப்ப வேண்டும்: விண்ணப்பம் 'ஓஎம்ஆர்' வடிவத்தில் வழங்கப்பட்டுள்ளது.

எனவே விண்ணப்பத்தில் கேட்ட விவரங்களை கருப்பு நிற அல்லது நீல நிற பால்பாயின்ட் பேனாவால் நிரப்ப வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்