தமிழகம் முழுவதும் அரசு டாக்டர்களுக்கு, வரும் ஏப்., 1 முதல் பயோமெட்ரிக் வருகைப் பதிவினை கட்டாயமாக்கும் படி, மருத்துவமனைகளுக்கு சுகாதாரத்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
டாக்டர்களின் தாமத வருகை, வருகைப் பதிவேட்டில் போலி கையெழுத்திடுதல் உள்ளிட்ட பிரச்னைகளை சுட்டிக்காட்டி, கடந்தாண்டு 'தினமலர்' நாளிதழ் செய்தி வெளியிட்டிருந்தது.இதனை அடிப்படையாக கொண்டு, மதுரையை சேர்ந்த சமூக ஆர்வலர் ஆனந்தராஜ், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொது நல வழக்கு தொடர்ந்தார். அதனை விசாரித்த உயர்நீதிமன்றம், அனைத்து அரசு மருத்துவமனைகளிலும், நான்கு மாதங்களில் பயோமெட்ரிக் வருகைப் பதிவு முறையை நடைமுறைப்படுத்த வேண்டும் என கடந்த ஜன., 25ல் உத்தரவிட்டது.இந்நிலையில் உயர்நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தும் விதமாக, வரும் ஏப்., 1 முதல் அரசு மருத்துவமனைகளில் வேலை செய்யும் டாக்டர்களுக்கு பயோமெட்ரிக் வருகைப் பதிவை கட்டாயமாக்கும்படி, சுகாதாரத்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
டீன் ஒருவர் கூறியதாவது: 2012ல் அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் விஜய் கொண்டு வந்த பயோமெட்ரிக் வருகைப் பதிவு திட்டத்தை, டாக்டர் சங்கங்கள் தங்கள் அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி முடக்கின. இதனால் வாங்கப்பட்ட பயோமெட்ரிக் இயந்திரங்களில் பெரும்பாலானவை வீணாகியது.
தற்போது, உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, இத்திட்டம் செயல்படுத்தப்படுவதால், டாக்டர் சங்க பிரதிநிதிகள் எதிர்ப்பு தெரிவிக்க தயங்குகின்றனர்.பயோமெட்ரிக் வருகைப் பதிவினை மறுக்கும் டாக்டர்கள் குறித்து, அரசுக்கு அறிக்கை அனுப்பப்படும், என்றார்.

No comments:
Post a Comment
குறிப்பு
1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..
அன்புடன்: கல்விக் கதிர்