March 25, 2017

ஆதார் எண்ணை பான் கார்டுடன் இணைக்காவிட்டால் பான் கார்டு ரத்து. - மத்திய அரசு அறிவிப்பு.


2017 டிசம்பர் 31ம் தேதிக்குள் வருமான வரித்துறை நிரந்தரக் கணக்கு எண்ணுக்காக வழங்கும் பான் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்காவிட்டால் பான் அட்டை காலாவதியாகி விடும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.



பான் கார்டு வைத்திருப்போர் அதனை ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும். அல்லது ஆதார் எண்ணுக்கு விண்ணப்பித்த சான்றை அளிக்க வேண்டும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தற்போது ஒருவரின் அடையாள அட்டையாக தேர்தல் ஆணையம் வழங்கும் புகைப்பட வாக்கு அட்டை மற்றும் பான் கார்டுகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இவற்றை ஆதார் எண்ணுடன் இணைத்து ஆதார் அட்டையை பிரதான அடையாள அட்டையாக நடைமுறைக்கு கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

எதிர்காலத்தில் ஆதார் அட்டை மட்டுமே ஒரே ஒரு அடையாள அட்டையாக மாறக்கூடிய வாய்ப்பு இருப்பதாக மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி நாடாளுமன்றத்தில் நிதி மசோதாவில் திருத்தங்களை அறிவிக்கும்போது குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்