March 01, 2017

நாளை தேர்வு எழுத இருக்கும் +2 மாணவ மாணவிகளுக்கு கல்விக் கதிர் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறது..


♦தேர்வுக்கு செல்லும் முன்னர் கட்டாயமாக காலை உணவு அவசியம்.*

*♦இரவுத் தூக்கம் மிக அவசியம். ஆறு மணி நேரம் வரை துாங்குவது புத்துணர்ச்சி அளிக்கும். உடல் இயக்கம் சுறுசுறுப்பாக இருக்க வழிவகுக்கும்.மனதையும் சுறுசுறுப்பாக வைத்திருக்கும்.*


*♦நீங்கள் இதுவரை பயன்படுத்திய பேனா பென்சில்களையே தேர்வு எழுதுவதற்கும் பயன்படுத்துங்கள். புதிய பேனாக்கள் தேவையில்லை. தேர்வு எழுதியவுடன் நீங்கள் எழுதியது சரிதானா என்பதை இறுதியில் மறுபடியும் படித்துப்பாருங்கள்.*

*♦முதலில் கேள்வித்தாளை ஒன்றுக்கு இருமுறை படித்துப் பாருங்கள். தெரிந்த கேள்விகளுக்கு முதலில் விடை எழுதுங்கள். சற்று யோசனை செய்துதான் விடை எழுத முடியும் என்றால் விடைதாள்களில் அதற்கான இடத்தை விட்டுவிட்டு அடுத்த கேள்விக்கு விரைவாக செல்லுங்கள்.*

*♦தேர்வு துவங்கும், அரை மணி நேரத்திற்கு முன், புத்தகம் படிப்பதை நிறுத்திகொள்ள வேண்டும்*

*♦பயம், பதற்றம், நடுக்கம் இவை தேவையில்லை. தன்னம்பிக்கையுடன் தேர்வு எழுதினால், நிச்சயம் நல்ல மதிப்பெண் பெற முடியும்.*

அன்புடன்: கல்விக் கதிர்

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்