March 01, 2017

2016 - 2017 ஆம் கல்வியாண்டில் +2 பாடத் திட்டங்களை மாற்றியமைப்பது குறித்து ஒருவாரத்தில் முடிவு எடுக்கப்படும். -தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தகவல்.


வரும் கல்வியாண்டில் பிளஸ் 2 பாடத்திட்டத்தை மாற்றியமைப்பது குறித்து ஒரு வாரத்தில் முடிவு எடுக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.





தமிழகம் முழுவதும் நாளை (மார்ச் 2) பிளஸ் 2 பொதுத் தேர்வு நடைபெறவிருக்கிறது. இந்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை இன்று (புதன்கிழமை) அமைச்சர் சந்தித்தார்.
அப்போது அவர், நாளை பிளஸ் 2 தேர்வை எழுதவிருக்கும் மாணவ, மாணவிகளுக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்தார்.
"போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுபவர்களை ஒப்பிட்டுப் பார்க்கும்போது சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் பயிலும் மாணவர்களுக்கு கூடுதல் வெற்றி வாய்ப்பிருக்கிறதே" என நிருபர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்து அமைச்சர், "தமிழகத்தில் வரும் கல்வியாண்டில் பிளஸ் 2 பாடத்திட்டத்தை மாற்றியமைப்பது தொடர்பாக ஒரு வாரத்தில் முடிவு எடுக்கப்படும். கல்வியில் தமிழகம் முதலிடத்தில் திகழ நடவடிக்கை

 எடுக்கப்படும்" என்றார்.
மேலும் அவர் கூறும்போது, "பிளஸ் 2 முடித்த மாணவர்கள் மேற்படிப்பு தொடர்பான ஆலோசனைகளைப் பெற அரசு சார்பில் இலவச ஆலோசனை மையங்கள் அமைக்கப்படும். தனியாருடன் இணைந்து மாணவர்களுக்கு மருத்துவ, பொறியியல் படிப்புக்கான பயிற்சி வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என்றார்.
அதேபோல், ஆசிரியர் தகுதி தேர்வில் வெயிட்டேஜ் முறை குறித்து ஓரிரு நாட்களில் முடிவு அறிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
முன்னதாக, பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவு மே 12-ம் தேதியும், எஸ்எஸ்எல்சி தேர்வு முடிவு மே 19-ம் தேதியும் வெளியிடப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங் கோட்டையன் கடந்த வாரம் அறிவித்தார்.
பொதுத்தேர்வுகள் தொடங்குவ தற்கு முன்பாகவே தேர்வு முடிவு தேதி அறிவிக்கப்படுவது அரசு தேர்வுத்துறை வரலாற்றில் இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், பிளஸ் 2 தேர்வுக்கு முந்தைய நாளான இன்று மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்ததோடு பாடத்திட்டம் மாற்றம் குறித்தும் அவர் பேசியிருக்கிறார்.

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்