பிளஸ் 2 தேர்வில் விடைத்தாள் திருத்தம், ஏப்., 1 முதல் துவங்கும் என, ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில், பிளஸ் 2 தேர்வு, 2ம் தேதி துவங்கியது. இதில், 9.33 லட்சம் பேர் பங்கேற்கின்றனர்.
மொத்தம், 2,434 இடங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன; 4,000 பறக்கும் படைகள், தேர்வு நாட்களில் அதிரடி சோதனை நடத்தி வருகின்றன.
இந்நிலையில், பிளஸ் 2 தேர்வுகள், 31ல் முடிகின்றன.
கடந்த சில ஆண்டுகளாக தேர்வு நடக்கும் போதே, விடைத்தாள் திருத்தமும் துவங்கியது. அதனால், ஆசிரியர்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகினர்.
விடைத்தாள் திருத்துவதா; தேர்வு பணி பார்ப்பதா;
பிளஸ் 1 மாணவர்களை கவனிப்பதா என, குழப்பம் ஏற்பட்டது. இதை தடுக்க, இந்த ஆண்டு தேர்வு முடிந்த பின், ஏப்ரல், 1 முதல் விடைத்தாள் திருத்தம் துவங்குகிறது.
தமிழகம் மற்றும் புதுவையில், 150 விடை திருத்தும் மையங்கள் அமைக்கப்பட்டு, திருத்த பணிகள் நடக்க உள்ளதாக, தேர்வுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். ஏப்ரல், 20க்குள், அனைத்து பாடங்களுக்கான திருத்தத்தையும் முடிக்க, தேர்வுத் துறையினர் திட்டமிட்டுள்ளனர்.

No comments:
Post a Comment
குறிப்பு
1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..
அன்புடன்: கல்விக் கதிர்