March 22, 2017

ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் அச்சிடும் பணி நடைபெற்று வருகின்றது. புதிய கார்டுகள் ஏப்ரல் 1 முதல் வழங்கப்பட உள்ளன.



🔶 ஸ்மார்ட் கார்டுகள், ஐந்து வகைகளில் இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

 🔹 அதன்படி, கார்டில், புகைப்படத்திற்கு கீழே,


💳 PHH - RICE என்றிருந்தால், அனைத்து பொருட்களும்;

💳 PHH- A என்றிருந்தால், 35 கிலோ அரிசி உட்பட, அனைத்து பொருட்களும் தரப்படும்.


💳 NPHH என மட்டும் இருந்தால், அரிசி உள்ளிட்ட அனைத்து பொருட்களும் தரப்படும்.

💳 NPHH - S என்றிருந்தால், சர்க்கரை;

💳 NPHH - NC என்றிருந்தால், எந்த பொருட்களும் வழங்கப்படாது.



🔸 ஸ்மார்ட் ரேஷன் கார்டு, 'பான் கார்டு' வடிவில் இருக்கும்.

🔹 அதன் முதல் பக்கத்தின் மேல் பகுதியில், அரசு முத்திரையுடன், 'உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை' என, அச்சிடப்பட்டிருக்கும்.

🔸 அதற்கு கீழ், குடும்ப தலைவர் பெயர், கணவர் அல்லது தந்தை பெயர், பிறந்த தேதி, புகைப்படம், தனி குறியீட்டு எண், முகவரி போன்றவை இருக்கும்.

🔹 பின்புறம், உறுப்பினர்கள் பெயர், ரேஷன் கடை எண், ஆண்டு மற்றும் 'கியூ.ஆர்.' (QR code) என்ற குடும்ப அட்டை விவரத்தை குறியீடாக பதிந்த அமைப்பு இருக்கும்.

 🔸 கார்டின் கீழ் பகுதியில், 'இந்த கார்டை முகவரிக்காக பயன்படுத்த முடியாது' என, எழுதப்பட்டிருக்கும்.

🔹 ஸ்மார்ட் கார்டில் QR Code மட்டுமே இடம் பெற்றுள்ளது. மைக்ரோ சிப் ஏதும் இணைக்கப்படவில்லை.

🔸 இந்த கார்டு தொலைந்து போனால் இ-சேவை மையங்கள் மூலமாக புதிய அட்டையை பெறலாம்.

🔹இணையதளம் மூலமாக தகவல்களில் மாற்றம் செய்யலாம் (மாற்றத்தக்கது) என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்