ஆசிரியர் தகுதி தேர்வுகளுக்கு, அரியலூர் மாவட்டத்தில் 12 மையங்களில் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படுகின்றன. இதுகுறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மாரிமுத்து வெளியிட்டுள்ள அறிக்கை:-
ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் அரசின் வழிகாட்டுதல்களின்படி ஆசிரியர் தகுதித் தேர்வு தாள்&1 மற்றும் தாள்&2 முறையே 29.04.2017
மற்றும் 30.04.2017 ஆகிய நாட்களில் நடைபெற உள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் அரியலூர் மாவட்டத்தில், முதன்மைக் கல்வி அலுவலரால் தெரிவிக்கப்பட்டுள்ள கீழ்காணும் மையங்களில் 06.03.2017 முதல் 22.03.2017 வரையுள்ள நாட்களில் (ஞாயிற்றுகிழமை தவிர) காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை விற்பனை செய்யப்பட உள்ளன. விற்பனை மையங்கள் தொடர்பாக, மாவட்ட வாரியான விவரங்கள் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்திலும் காணலாம். ஒரு விண்ணப்பக் கட்டணம் ரூ.50ஐ தொகையாக அளித்து விண்ணப்பத்தினை விற்பனை மையங்களில் பெற்றுக்கொள்ளலாம். ஒரு நபருக்கு ஒரு விண்ணப்பம் மட்டுமே வழங்க தெரிவித்துள்ளார்&1 மற்றும் தாள்&2 ஆகிய இருதேர்வுகளை எழுத விரும்பும் விண்ணப்பதாரர் தனித்தனியான விண்ணப்பங்களில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பம் விற்பனை செய்யப்படும் இடங்கள்
💐1. தூய மேரி உயர்நிலைப்பள்ளி, அரியலூர்
💐2. ஆர்.சி.நிர்மலா காந்தி நடுநிலைப்பள்ளி, அரியலூர்
💐3. ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, திருமானூர்
💐4. ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, கீழப்பழுவூர்
💐5. ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, தா.பழூர்
💐6. ஆர்.சி.பாரத மாதா உயர்நிலைப்பள்ளி, நடுவலூர்
💐7. அரசு(பெண்கள்)உயர்நிலைப்பள்ளி,ஜெயங்கொண்டம்
💐8. பாத்திமா (மெட்ரிக்) உயர்நிலைப்பள்ளி, ஜெயங்கொண்டம்
💐9. ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, விளந்தை ஆண்டிமடம் (மேற்கு)
💐10. புனித மாத்தினாள் (மெட்ரிக்) உயர்நிலைப்பள்ளி, ஆண்டிமடம்
💐11. ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, நெய்வனம் செந்துறை
💐12. அறிஞர் அண்ணா மேல்நிலைப்பள்ளி, விழுப்பணங்குறிச்சி (செந்துறை)
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் அரியலூர் மாவட்டத்தில், முதன்மைக் கல்வி அலுவலரால் தெரிவிக்கப்பட்டுள்ள கீழ்காணும் மையங்களில் 06.03.2017 முதல் 23.03.2017 வரையுள்ள நாட்களில் காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை (ஞாயிற்றுகிழமை தவிர) திரும்ப பெறப்படும். விண்ணப்பங்கள் விற்பனை செய்யப்பட்ட மாவட்டங்களிலேயே திரும்ப அளிக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. ஒரு மாவட்டத்தில் விண்ணப்பம் பெறப்பட்டிருப்பினும் மற்றொரு மாவட்டத்தில் பூர்த்தி செய்த விண்ணப்பத்தினை அளிக்கலாம்.
மேலும், சி.எஸ்.ஐ.மேல்நிலைப்பள்ளி, அரியலூர், அரசு (பெண்கள்) உயர்நிலைப்பள்ளி, ஜெயங்கொண்டம் ஆகிய இடங்களில் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் திரும்ப பெறப்படும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அவர்கள் தெரிவித்துள்ளார்..
No comments:
Post a Comment
குறிப்பு
1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..
அன்புடன்: கல்விக் கதிர்