March 01, 2017

12ஆம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வு தமிழ்நாடு & புதுச்சேரியில் நாளை (02.03.2017) தொடங்குகிறது.


📋 தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 பொதுத்தேர்வு நாளை தொடங்குகிறது.

📝 இதில் 8 லட்சத்து 98 ஆயிரத்து 763 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர்.

📋 2,427 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

📝 3 ஆயிரம் பேர் கொண்ட பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது.



📋 தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 6,737 பள்ளிகளில் படிக்கும் பிளஸ் 2 மாணவ, மாணவிகளுக்கான பொதுத்தேர்வு மார்ச் 2 ஆம் தேதி தொடங்குகிறது.

📝 இந்த தேர்வை 8 லட்சத்து 98 ஆயிரத்து 763 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர்.

📋 அவர்களில் 4 லட்சத்து 17 ஆயிரத்து 952 பேர் மாணவர்கள், 4 லட்சத்து 80 ஆயிரத்து 810 பேர் மாணவிகள்.

📝 பிளஸ் 2 தேர்வு எழுதும் மாணவர்களை கண்காணிக்க ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தலைமையில் சுமார் 300 பேர் கொண்ட பறக்கும் படை வீதம் தமிழகம் முழுவதும் 3 ஆயிரம் பேர் கொண்ட பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது.

📋 இவர்கள் தேர்வு நடக்கும் போது, அனைத்து மையங்களில் திடீரென சோதனை மேற்கொள்வார்கள்.

📋 மாவட்ட வாரியாக தேர்வை கண்காணிக்க 6 இயக்குனர்கள், 20 இணை இயக்குனர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

📝 தேர்வு எழுத வரும் மாணவர்கள் செருப்பு, ஷூ, டை அணிந்து வருவது தடை செய்யப்பட்டுள்ளது. செல்போன் கொண்டு வர அனுமதி கிடையாது.

📋 உரிய பாடங்களை தவிர மற்ற பாடங்களுக்கு கால்குலேட்டர் எடுத்து வரக்கூடாது. ஆள்மாறாட்டத்தை தடுப்பதற்காக தேர்வு எழுதும் மாணவர்களின் புகைப்படத்துடன் கூடிய ஹால் டிக்கெட் வழங்கப்பட்டுள்ளது.

📝 மாணவர்களின் விடைத்தாளிலும் மாணவர்கள் போட்டோ இடம் பெறுகிறது.

வருகை பதிவேட்டிலும் மாணவர்களின் புகைப்படம் இடம் பெறுகிறது.

📋 பொது மக்கள் தங்களின் கருத்துக்கள், புகார்கள், சந்தேகங்களை தேர்வுக் கட்டுப்பாட்டு அறை எண்களை தொடர்புகொண்டு தெரிந்துகொள்ளலாம். 8012594114, 8012594115, 8012594122, 8012594124 ஆகிய எண்களில் தேர்வு காலங்களில், காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை தேர்வுக்கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம் என அரசுத்தேர்வுகள் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்