March 30, 2017

10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் இனிஷியலை தமிழில் எழுதி அனுப்புமாறு பள்ளிகளுக்கு உத்தரவு..

தமிழகத்தில் நடப்பாண்டு முதல் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, பள்ளிக்கல்வித் தகவல் மேலாண்மை இணையதளம் மூலம் பெறப்பட்ட தகவல் அடிப்படையில், தேர்வு எண் அளிக்கப்பட்டுள்ளது. பள்ளிகளில், மாணவர்கள் விபரங்களை, எமிஸ் இணையதளத்தில் பதிவு
செய்தபோது, முதலெழுத்து என்கிற இடத்தில், பலர் இனிஷியல் நிரப்பவில்லை.

பல மாணவர்களின் முதலெழுத்து தமிழில் துவங்கும் சொல்லை, ஆங்கிலத்தில் மொழிப்பெயர்த்து எழுதப்பட்டுள்ளதால், பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன. இதனால், பள்ளிகளில் இருந்து, மாணவர்களின் முதலெழுத்தை, கல்விச்சான்றிதழ்களில் உள்ளபடியே எழுதி அனுப்புமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து அரசு தேர்வுகள் துறை இயக்குனர் வசுந்தராதேவி வெளியிட்ட அறிக்கையில், “பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, முதலெழுத்து தமிழில் எழுத வேண்டும். குறிப்பாக, 'இராஜேந்திரன்' என்ற தந்தை பெயருக்கு, முதலெழுத்து குறிப்பிடுகையில், 'ஆர்' என்றோ, 'ரா' என்றோ குறிப்பிடாமல், 'இரா' என, கல்விச்சான்றிதழ்களில் குறிப்பிட்டுள்ளபடி நிரப்பி, விரைவில் அனுப்பி வைக்கவேண்டும். இத்தகவல்களை, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சரிபார்த்து, அரசு தேர்வுகள் துறைக்கு, அனுப்பி வைக்க வேண்டும்”. இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.


No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்