✳ தமிழகத்தில் பொருள்கள் வாங்காத அட்டைகள், காவலர் அட்டைகள், சர்க்கரைக்கு மட்டும் வழங்கப்பட்ட அட்டைகள், எல்லாப் பொருள்களும் வாங்கும் அட்டைகள், அந்தியோஜனா அன்னபூர்ணா திட்டம் என 5 வகைகளில் 1.91 கோடி குடும்ப அட்டைகள் பயன்பாட்டில் உள்ளன.
✳ இந்த அட்டைகளுக்கு 34,774 நியாய விலைக்கடைகள் மூலம் உணவுப் பொருள்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன.
✳ இதற்குப் பதிலாக புதிய அட்டைகள் வழங்காமல் பல ஆண்டுகளாக உள்தாள் இணைக்கப்பட்டு பயன்பாட்டில் இருந்து வருகின்றன.
✳ இதில் போலி குடும்ப அட்டைகளைப் பயன்படுத்தியும் பொருள்களை வாங்கி வந்தனர்.
✳ அரசு மானியத்தில் வழங்கும் உணவுப் பொருள்கள் உண்மையான பயனாளிகளுக்கு சென்றடையும் வகையிலும், முறைகேடுகளைத் தடுக்கும் நோக்கத்திலும் பழைய குடும்ப அட்டைகளுக்குப் பதிலாக புதிதாக நவீன கையடக்க அளவில் ஸ்மார்ட் கார்டுகள் வழங்கும் திட்டம் கொண்டு வரப்பட்டது.
✳ இதன் அடிப்படையில் இந்த அட்டைகள் அச்சடிக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
கொரட்டூரில் தொடக்கம்:
✳ இத்திட்டத்தை அம்பத்தூர் அருகே கொரட்டூரில் சனிக்கிழமை நடைபெறும் அரசு விழாவில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார்.
✳ இதில் உணவுத் துறை அமைச்சர் காமராஜ் ஆகியோர் பங்கேற்க இருக்கின்றனர்.
மற்ற மாவட்டங்களில்..
✳ மாநில அளவில் சென்னை தவிர்த்து 285 வட்டங்களில் குடும்ப அட்டைதாரர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப சமுதாயக் கூடம், திருமண மண்டபங்களில் முகாம் அமைத்து ஸ்மார்ட் ரேஷன் அட்டைகள் வழங்கப்பட உள்ளன.
✳ முதலமைச்சர் தொடங்கி வைத்ததும் அந்தந்தப் பகுதியைச் சேர்ந்த அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் பொதுமக்களுக்கு 'ஸ்மார்ட்' ரேஷன் அட்டைகள் வழங்கப்பட இருக்கின்றன.
கூட்டத்தைத் தவிர்க்க..
✳ 'ஸ்மார்ட்' ரேஷன் அட்டை பெறும்போது நெருக்கடி ஏற்படுவதைத் தவிர்க்கும் வகையில் முதல் நாளே அந்தந்தப் பகுதி கூட்டுறவு நியாய விலைக்கடைப் பணியாளர்கள் மூலம் தகவல் தெரிவிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
✳ அதேபோல், குடும்ப அட்டைகளின் எண்கள் வரிசை அடிப்படையில் தகவல் பலகையில் வெளியிடவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
'ஸ்மார்ட்' ரேஷன் அட்டையை பெற
✳ பழைய குடும்ப அட்டையுடன் குடும்பத் தலைவரோ அல்லது குடும்ப அட்டையில் பெயர் உள்ளவர்கள் ஆதார் அட்டையை காண்பித்து ஸ்மார்ட் ரேஷன் அட்டையை பெற்றுக் கொள்ளலாம்.
✳ இந்த அட்டையை வாங்கியவுடன் உடனே அருகில் உள்ள கூட்டுறவு நியாய விலைக்கடைக்குச் சென்று நவீன கருவியில் ஸ்மார்ட் அட்டையை பதிவேற்றம் செய்து செயல்பாட்டுக்குக் கொண்டு வரவேண்டும்.
🔵 ஸ்மார்ட் கார்டு விநியோகம் தொடர்பாக குடும்ப அட்டைதாரர்களின் செல்லிடப்பேசிக்கு தகவல் அனுப்பி வைக்கப்படும் என்று மதுரை மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவ ராவ் தெரிவித்துள்ளார்.
🔸 இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி:
💳 குடும்ப அட்டைதாரர்களுக்கு புதிய ஸ்மார்ட் கார்டுகள் சனிக்கிழமை முதல் வழங்கப்பட உள்ளன.
🔹 அதுகுறித்த விவரம் குடும்ப அட்டைதாரர்களின் செல்லிடப்பேசிக்கு குறுந்தகவலாக அனுப்பி வைக்கப்படும்.
🔸 குறுஞ்செய்தியில் உள்ள கடவுச் சொல், பழைய குடும்ப அட்டை, ஆதார் அட்டை, குறுஞ்செய்தி பெறப்பட்ட செல்லிடப்பேசி ஆகியவற்றுடன் சம்பந்தப்பட்ட நியாய விலைக் கடைக்குச் சென்று ஸ்மார்ட் கார்டு பெற்றுக் கொள்ளலாம்.
🔹 இதற்கு எவ்விதக் கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை.
🔸 இதுவரை செல்லிடப்பேசி எண் பதிவு செய்யாதவர்கள் உடனடியாக தங்களது நியாய விலைக் கடையில் பதிவு செய்து கொள்ள வேண்டும்.
🔹 ஸ்மார்ட் கார்டு குறித்து குறுஞ்செய்தி வராதவர்கள் அச்சம் அடையத் தேவையில்லை.
🔸 அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும் என்றார்.
No comments:
Post a Comment
குறிப்பு
1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..
அன்புடன்: கல்விக் கதிர்