February 28, 2017

TNTET : கட்-ஆஃப் மதிப்பெண் முறையை நீக்க பரிசீலனை: தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தகவல்.


🌺 ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு கட்-ஆஃப் மதிப்பெண் முறையை நீக்குவது குறித்து பரிசீலித்து நடவடிக்கை எடுக்க இருப்பதாக, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

கோபியில் இருந்து சென்னை செல்லும் வழியில் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம், திங்கள்கிழமை (27.02.2017) அவர் மேலும் கூறியதாவது:

🔶 மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கைக்காக மத்திய அரசு கொண்டு வந்துள்ள நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று பிரதமர் மோடியிடம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.

🔷 இது தொடர்பாக, தமிழக சட்டப்பேரவையில் இயற்றப்பட்ட சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிப்பார் என்று நம்புகிறோம்.

🔶 ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு கட்-ஆஃப் மதிப்பெண் முறை நீடிப்பதால், பாதிப்பு இருப்பதாகத்தொடர்ந்து வலியுறுத்தப்படுகிறது. இதை நீக்குவது குறித்து பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்