February 15, 2017

TNTET - அறிவியலில் மதிப்பெண் அள்ள வேண்டுமா?


TNTET - அறிவியல் பாடத்தை படிக்கும் போது கவனிக்க வேண்டியவை:-

அறிவியல் தாள் I - க்கு 1-ஆம் வகுப்பு முதல் 10-ஆம் வரை படித்தால் மட்டுமே முழு மதிப்பெண்களைப் பெற முடியும். சூழ்நிலை அறிவியல் என்பதனால்
சூழ்நிலை பற்றிய வினாக்கள்  சற்று அதிகமாக கேட்கப்படும். இவை தவிர அடிப்படை அறிவியல் சம்பந்தமான அறிவைப் பெற்றிருப்பது அவசியம். உதாரணமாக, உயிரியலில் நமது சுற்றுச்சூழல், உடல் உறுப்பு மண்டலம், வேதியியலில் வேதிவினைகள், நிலக்கரி மற்றும் பெட்ரோலியம், இயற்பியலில் அளவீடுகள், அளவிடும் கருவிகள் போன்றவற்றைப் படித்திருக்க வேண்டும்.

ஆசிரியர் பயிற்சி பாடப் புத்தகமான, இரண்டு வருடத்திலும் உள்ள அறிவியல் கற்பித்தல் என்ற புத்தகத்தை முழுவதுமாகப் படித்தல் வேண்டும். 1-ஆம் வகுப்பு முதல் 3-ஆம் வகுப்பு வரை மிக எளிமையான பாடப்பகுதி இருக்கும் இவை தேவையில்லை என்று ஒதுக்கவேண்டாம்.

அறிவியல் தாள் - II க்குப் படிக்க வேண்டிய பாடப் பகுதி, 1-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு.

உதாரணமாக: தாவரவியலில் -  தாவர உலகம், செல் அமைப்பு
விலங்கியலில் - நுண்ணுயிரிகள் விலங்கு உலகம்
வேதியியலில் - வேதிவினைகள், கரிமச் சேர்மங்கள்

இயற்பியலில் - அளவீடுகள் ஒளியியல், ஒலியியல், மின்காந்தவியல் போன்றவற்றை மட்டும் நன்கு படித்தால் போதுமானது. 11-ஆம் வகுப்பு 12-ஆம் வகுப்பு புத்தகம் முழுமைக்கும் படிக்க வேண்டியதில்லை. பி.எட். பட்ட வகுப்புகளை அறிவியல் கற்பித்தல் பாடப் புத்தகத்தை முழுமையாகப் படித்தல் வேண்டும். இவற்றிலிருந்தும் வினாக்கள் கேட்கப்படும். இதன் மூலம் அறிவியல் கற்பித்தல் முறைகளை அறிய முடியும். IUPAC பெயரிடும் முறையை பயிற்சி செய்துகொள்ளுதல் அவசியமான ஒன்று.

முந்தைய போட்டித் தேர்வின் மாதிரி வினாத்தாள்களை பயிற்சி செய்தல் வேண்டும்."

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்