February 13, 2017

TNTET ஆங்கிலத்தில் சாதிக்க வழி.

ஆங்கிலத்தில் Paper I  மற்றும் Paper II  இரண்டிற்குரிய பாடங்களையும் சேர்த்தே ஓன்றாகப் படிக்க வேண்டும்.

இதற்கு முன்னால் கேட்கப்பட்ட Paper I தாளிற்குரிய கேள்விகளில் பிளஸ் 1, பிளஸ் 2 போன்ற வகுப்புகளிலிருந்தும் வினாக்கள் கேட்கப்பட்டிருந்தன.
அதைப்போல Paper II தாளிற்குரிய கேள்விகளில் நான்காம் வகுப்பு மற்றும் ஐந்தாம் வகுப்புகளிலிருந்தும் கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. ஆகையால் இரண்டையும் ஒன்றாகக் கருதி ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை உள்ள பாடங்களை வரி விடாமல் படித்து முடித்துவிடவும். Paper I எழுதுபவர்கள் தற்போதுD.T.Ed. பாடத்திட்டத்தில் உள்ள அனைத்துப் பாடங்களையும் படிக்க வேண்டும். Paper II  எழுதுபவர்கள் B.Ed. பாடத்திலுள்ள அனைத்தையும் படிக்க வேண்டும். ஆங்கிலத்தில் 30 கேள்விகளில் 21 கேள்விகள் இலக்கணத்திலிருந்து கேட்கப்படுகின்றன.

இரண்டு கேள்விகள் phonetics  என்ற பகுதியிலிருந்து கேட்கப்படுகின்றன. 5 கேள்விகள் –Methodology பகுதியிலிருந்தும் 1 அல்லது 2 கேள்விகள் பாடத்திலுள்ள பொது அறிவு சார்ந்த பகுதிகளிலிருந்தும் கேட்கப்படுகிறது. Direct and Indirect Speech, Active Voice and Passive Voice, Degrees of comparisons, Questions Tags, Singular and Plural, Idioms and Pharses, Phrasal verbs, Simple, Complex, Compound, Articles, Parts of speech, Tenses, Comprehension Passages, sentence patterns, Compound words, etc  போன்ற பகுதிகளிலிருந்து அதிகமான கேள்விகள் கேட்கப்படுகின்றன.

மற்ற பகுதிகளிலிருந்தும் கேள்விகள் வரும். இதற்கு சமச்சீர் கல்வி நூல்கள், பிரிட்டீஷ் ஆசிரியர்களால் எழுதப்பட்ட நல்ல ஆங்கில இலக்கண நூல்கள், Railway Exams, Bank Exams, TNPSC யில் இதுவரையிலும் வெளிவந்த ஆங்கில இலக்கணத்திலிருந்து கேட்கப்பட்ட கேள்விகளை பயிற்சி செய்து பார்ப்பது நல்லது."

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்