February 25, 2017

TNPSC GROUP 2A -தேர்விற்கு தயாராகும் வழிமுறைகள்:


தேர்வினை புதிதாக எழுத உள்ள நண்பர்களின் வேண்டுகோளுக்கு இணங்க பகிர்ந்து கொள்கிறேன்
.
நீ எதை நினைக்கிறாயோ அதுவாக ஆகிறாய் - சுவாமி விவேகானந்தர்.

முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டியவை:
1.பொது தமிழ் (100 வினாக்கள்)
6 அம் வகுப்பு முதல் 12 வகுப்பு வரை உள்ள தமிழ் சமச்சீர் கல்வி பள்ளி பாட புத்தகங்கள்
தமிழ் இலக்கியம் தொடர்பான வினாக்களுக்கு தேவிரா இலக்கிய வரலாறு புத்தகம்
( தினமும் பொது தமிழ் பாடத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும்)
2.கணிதம் ( 25 வினாக்கள் )

6 அம் வகுப்பு முதல் 8 வகுப்பு வரை உள்ள கணிதம் சமச்சீர் கல்வி பள்ளி பாட புத்தகங்கள்.
YESHUVA PUBLISHERS- கணித புத்தகம் தொகுதி I மற்றும் தொகுதி II
(தினமும் கணிதம் தொடர்பான வினாக்கள் பயிற்சி அவசியம்)
3.நடப்பு நிகழ்வுகள் : ( 10 முதல் 15 வினாக்கள்)
தினசரி செய்தித்தாள்கள் குறிப்பாக தி ஹிந்து தமிழ் நாளிதழ் மற்றும் தினமணி நாளிதழ்
அன்றாடம் செய்திகள் குறிப்பு எடுத்து வைத்து கொண்டு படிக்கவும்.
எக்ஸாம் மாஸ்டர்(Exam Master) எனும் போட்டி தேர்விற்கான மாத இதழ்.
www.tnpscportal.in எனும் இணைய தளத்தின் பதிவுகள்.
சமூக வலைத்தளமான facebook tnpsc exam group பதிவிடும் வினாக்கள்.
மனோரமா இயர் புக் 2017
அறிவியல் :
6 அம் வகுப்பு முதல் 10 வகுப்பு வரை உள்ள சமச்சீர் கல்வி பள்ளி பாட புத்தகங்கள் மற்றும் 12 ம் வகுப்பு விலங்கியல் புத்தகம் இவைகளை கண்டிப்பாக படிக்கவும்.
நேரமிருந்தால் 11 ம் வகுப்பு மற்றும் 12 வகுப்பு அறிவியல் புத்தகங்கள்.
5.இந்தியா வரலாறு:
6 அம் வகுப்பு முதல் 10 வகுப்பு வரை உள்ள சமச்சீர் கல்வி பள்ளி பாட புத்தகங்கள்
11 ம் வகுப்பு வரலாறு புத்தகம் இவைகளை கண்டிப்பாக படிக்கவும்.
இந்திய சுதந்திர போராட்ட வரலாறு:
10 ம் வகுப்பு சமூக அறிவியல் புத்தகம் மற்றும் 12 ம் வகுப்பு வரலாறு புத்தகம்
இந்தியா அரசியலமைப்பு :
6 அம் வகுப்பு முதல் 10 வகுப்பு வரை உள்ள சமச்சீர் கல்வி பள்ளி பாட புத்தகங்கள்
11 ம் வகுப்பு மற்றும் 12 ம் வகுப்பு அரசியல் அறிவியல் புத்தகம்.
இந்திய பொருளாதாரம் :
6 அம் வகுப்பு முதல் 10 வகுப்பு வரை உள்ள சமச்சீர் கல்வி பள்ளி பாட புத்தகங்கள்
11 ம் வகுப்பு இந்திய பொருளாதாரம் புத்தகம்.
12 ம வகுப்பு பொருளாதார கோட்பாடு புத்தகம் ( பணக் கொள்கை மற்றும் நிதியியல் கொள்கை பாட பகுதி போதுமானது )

TNPSC GROUP 2A -தேர்ச்சி பெற அணுகுமுறை :

1.ஒரு நாளைக்கு குறைந்தது 8 முதல் 10 மணி நேரம் ஆழ்ந்து தெளிவாக படித்தால் போதுமானது.
2.மாதிரி தேர்வுகள் எழுதி பார்க்கவும்.(உதாரணமாக Facebook TNPSC EXAMS Groups (TARGET TNPSC- தம்பு சார் ) (TNPSC OCEAN -சேகர். சுபா சார்) (EFFORT TNPSC - சங்கர் ராஜ் சார்) CURRENT AFFAIRS,ARIVU TNPSC மற்றும் TNTET & PG TRB ஆகியோர் பதிவிடும் மாதிரி தேர்வு வினாக்கள்
புத்தன் சாத்தூர் சார் மற்றும் பழனி முருகன் சார் பதிவிடும் நடப்பு நிகழ்வுகள் தொடர்பான வினாக்கள் குறிப்பு எடுத்து வைத்து கொண்டு படிக்கவும்.
3. சமூக வலைத்தளமான facebook, whatsapp - அதிக நேரம் செலவிடுதலை தவிர்க்கவும்
4.முந்தைய ஆண்டுகளில் நடைபெற்ற TNPSC Grp 1,2,2A,Grp 4 மற்றும் VAO தேர்வு தாள்களின் வினாக்களை படிக்கவும்.
5. TNPSC Group 2A (Syllabus)பாடத்திட்டத்தின் படி படித்தல் அவசியம்
அனைவரும் எதிர்வரும் TNPSC GROUP 2A -தேர்வில் வெற்றி பெற என்னுடைய வாழ்த்துக்கள்

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்