February 07, 2017

கல்வி தரத்தை உயர்த்துவதே அரசின் தலையாய கடமை'..

'கல்வித் தரத்தை உயர்த்துவதே மத்திய அரசின் தலையாய கொள்கை' என, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர், பிரகாஷ் ஜாவடேகர் கூறியுள்ளார்.



பா.ஜ.,வைச் சேர்ந்தவரும், மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சருமான, பிரகாஷ் ஜாவடேகர் கூறியதாவது:நாடு முழுவதும் கல்வியின் தரத்தை மேம்படுத்துவதே, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் தலையாய கொள்கை.




கல்வித் துறைக்கு, 2017 - 18ம் ஆண்டுக்கான, மத்திய பட்ஜெட்டில், 79 ஆயிரத்து, 685 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது; இது, நடப்பு ஆண்டை விட, 6,000 கோடி ரூபாய் அதிகம்.


உலக நாடுகளில், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், 6 சதவீதத்தை, கல்விக்கென ஒதுக்குவது வழக்கமாக உள்ளது. இந்தியாவில், கல்விக்கு, மொத்த உள்நாட்டு உற்பத்தியில், 4 சதவீதம் ஒதுக்கப்பட்டுள்ளது. விரைவில் இது, 6 சதவீதமாக உயர்த்தப்படும்.



கல்வியால் கிடைக்கும் பயன்கள் எவ்வாறு இருக்க வேண்டும் என்பது குறித்து நிபுணர்களுடன் கலந்தாலோசிக்கப்பட்டது. அது தொடர்பாக, மார்ச் மாதத்திற்குள் முடிவு செய்யப்படும். நாடு முழுவதும், கல்வியில் பிற்பட்ட பகுதிகளில், தரம் வாய்ந்த கல்வி அளிப்பதற்கு, சிறப்பு நிதி ஒதுக்க திட்டமிடப்பட்டுள்ளது. உயர் கல்வி மையங்களில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வுகளை நடத்த, தன்னாட்சி அதிகாரத்துடன் கூடிய தேசிய நுழைவுத் தேர்வு மையம் அமைக்கப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். 

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்