February 28, 2017

தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வு (D.T.Ed.,) எழுதியவர்கள் மார்ச் 1-ஆம் தேதி முதல் 3-ஆம் தேதி வரை விடைத்தாள் நகலை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.



ஜூன் 2016-இல் நடைபெற்ற தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வு எழுதியவர்களில்
விடைத்தாள்களின் நகல் கோரி பிப்ரவரி 6 முதல் 8-ஆம் தேதி வரை
விண்ணப்பித்தோர், அவற்றை scan.tndge.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
மறுகூட்டலுக்கு எப்போது? இதைத் தொடர்ந்து, மறுகூட்டல் அல்லது மறுமதிப்பீடு செய்ய விரும்புவோர் www.tndge.in என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்ப படிவத்தைப் பதிவிறக்கம் செய்து கொண்டு அதைப் பூர்த்தி செய்து விண்ணப்பத்துடன் அதில் குறிப்பிடப்பட்டுள்ள கட்டணத் தொகையை மார்ச் 6 முதல் மார்ச் 8-ஆம் தேதி வரை தொடர்புடைய மாவட்ட ஆசிரியர் கல்வி, பயிற்சி நிறுவனங்களில் நேரடியாகச் செலுத்தி இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்யலாம்.

விடைத்தாளின் மறுகூட்டலுக்கு விண்ணப்பிப்பவர்கள் ஒரு பாடத்துக்கு ரூ.205 செலுத்த வேண்டும்.

தேர்வர் வசிக்கும் மாவட்டத்துக்கு அருகில் உள்ள மாவட்ட ஆசிரியர் கல்வி, பயிற்சி நிறுவனத்தில் உரிய கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.

விடைத்தாளின் மறு மதிப்பீட்டுக்கு விண்ணப்பிப்பவர்கள் ஒரு பாடத்துக்கு ரூ.505 செலுத்த வேண்டும்.

இந்தத் தகவலை அரசுத் தேர்வுகள் துறை இயக்குநர் தண்.வசுந்தராதேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்