February 21, 2017

தற்போதைய அரசு பள்ளி மாணவர்களின் நிலையை எடுத்து சொல்வதற்காக இந்த நெடிய பதிவு...


👉🏼தற்போது அரசு பள்ளிகளில் பின்பற்றபட்டு வரும் அடைவுதேர்வு முறை கானல் நீராகவே உள்ளதாக கருதுகின்றனர் அரசு பள்ளி ஆசிரியர்கள்...


👉🏼ஏனெனில் தேர்வு என்றாலே நம் அனைவருக்கும் தெரிந்தது என்ன ? குறிப்பிட்ட பாடப்பகுதியில் குறிப்பிட்ட கால அளவு கொடுத்து சோதித்து அறியும் மதிப்பபீடு தானே, ஆனால் இந்த அடைவு தேர்வுகள் அப்படியல்ல..

👉🏼தீடிரென்று ஒரு நாள் எந்தவித பாடப்பகுதியும் குறிப்பிடாமல் பயில்வதற்கு போதிய கால அவகாசம் தராமல் நடத்தப்படுவது வியப்பு...

👉🏼தற்போது 2முதல்5 ம் வகுப்பு பயிலும் இம்மாணவனுக்கு தரப்படும் அடைவுதேர்வு மொழிப்பாடத்தில் வாசித்தல் , பார்க்காமல் எழுதுதல் கணிதத்தில் அடிப்படைதிறன் அவ்வளவு தான் , இதைக்கூட சொல்லித்தராமல் ஆசிரியர்களை...
 குறை சொல்ல கிளம்பிவிடாதீர்கள் , கொஞ்சம் சிந்திக்கவும்...
இந்த பதிவை வாசிக்கும் உங்களுக்கு தீடிர் அடைவுத்தேர்வு
1.செக்கோஸ்லோவியா , அமெட்யூர், காஜ் , ஆம்ஸ்டர்டம் , மிஸ்ச்சீவியஸ் .... இது போன்ற வாக்கியங்களை மெத்த படித்த உங்களால் ஆங்கிலத்தில் பிழை இல்லாமல் எழுத முடியுமா ?

2.கணிதத்தில் A trader buys goods at 19% off the list price. He wants to get a profit of 20% after allowing a discount of 10%. At what percent above the list price should he mark the goods?

மேற்கண்ட வினாக்கள் சாதாரண அடிப்படை திறன் சோதனையே... உங்களால் உடனடியாக விடையளிக்க முடியவில்லை எனில் நாம் அடைவுத்திறன் பெறவில்லை என்று அர்த்தமா ?

👉🏼இல்லை , நமக்கு இப்பகுதியில் பரிச்சயம் இல்லை என்று தான் பொருள்..

👉🏼இதுபோல் தான் மேற்கண்ட அடைவுதிறன் சூழல்.. பெரும்பாலான அரசு பள்ளி மாணவர்கள் காலை உணவு உண்பதில்லை
( மறைந்த முதல்வர் மாண்புமிகு அம்மா அவர்கள் காலை உணவு வழங்க ஆவன செய்தது குறிப்பிடதக்கது) , சில பல குடும்ப பிரச்சனைகளை சுமந்து கொண்டு , வெறும் வயிற்றோடு சில இடங்களில் நெடுந்தூரம் நடந்து கூட பள்ளிக்கு வருகிறார்கள் மாணவர்கள்...
மேலும் பள்ளியை விட்டு வெளியேறினால் கற்பதற்கு , அறிவை வளர்க்கும் வாய்ப்பில்லாத குடும்ப சூழல் உள்ள கிராம பகுதி .

👉🏼சரி ஆயிரம் சப்பைகட்டுகள் இருக்கட்டும் , உதாரணமாக 10மாணவர்கள் உள்ள வகுப்பில் அதில் 2(அ) 3 மாணவர்கள் இந்த அடிப்படை திறன் பெறவில்லை எனில் அந்த வகுப்பாசிரியர் சட்டையை பிடித்து கேளுங்கள், வகுப்பில் மீத்திற, சுமார், மெல்ல கற்போர் என திறன் வாரியாக வகையில் அடங்குவர், 5 மாணவர்கள் இருந்தாலும் சரி 500 மாணவர்கள் இருந்தாலும் இது தான் நியதி .

👉🏼இதில் கேலிக்கூத்து என்னவெனில் 2ம் வகுப்பு முதல் பருவத்தில் தான் தமிழ் எழுத்துக்களை முழுவதுமாக அறிந்து கொள்கிறான். அதிலும் 2006-07 ல் கொண்டு வரப்பட்ட செயல்
வழிகற்றலில் மாணவர்களுக்கு ஒட்டு மொத்தமாக தேர்வு கிடையாது, அவரவர் ஏணிப்படியில் அந்த கற்றல் அட்டை  வரும்போது தான் தேர்வு. இதுபோதாது என்று ஆல் பாஸ் என்ற வேறு..

👉🏼சரி சுற்றி வளைத்தது போதும், அடைவுதிறன் என்ற பெயரில் புள்ளி விவரத்திற்காக புலங்காகிதம் அடைவதை விடுத்து
குறிப்பிட்ட பாடப் பகுதியை வெளியிடுங்கள். குறிப்பிட்ட கால அவகாசம் கொடுங்கள் , மெல்ல கற்கும் மாணவர்களின் திறனை சோதிக்க தனித்தேர்வு பின்பற்றுங்கள், விளையாட்டு , ஓவியம், நாடகம் என பல் திறமையை சோதித்தறியுங்கள்.. அடைவுதிறன் பற்றி ஆசிரியர்களின் கருத்துக்களை கேளுங்கள்.. ஒரு போதும் மனப்பாடம் செய்யும் தனியார் பள்ளிகளோடு ஒப்பிட்டு விடாதீர்கள், அரசு பள்ளியில் எந்த பெற்றோரும் வீட்டுபாடம் செய்ய உதவுவதில்லை...   தீடிரென சோதித்து தீர்ப்பு எழுதி விடாதீர்கள் என்பதே அனைத்து ஆசிரியர்களின் எண்ணம்...

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்