February 19, 2017

திறமையான ஒரு கல்வி அமைச்சரை இழந்து விட்டார்கள், தமிழக ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள். ..

திறமையான ஒரு கல்வி அமைச்சரை இழந்து விட்டார்கள், தமிழக ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள். தனது தனிப்பட்ட திறமையால் ஜெயலலிதாவின் அபிமானத்தைப் பெற்றவர் மாஃபா பாண்டியராஜன். மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, தனது பதவியைப் பறிகொடுத்திருக்கிறார்.


பேரவையில் எதிர்கட்சி உறுப்பினர்களின் கேள்விகளுக்கு தெளிவான, துல்லியமான புள்ளி விவரங்களோடு பதிலளித்து ஜெயலலிதாவின் நன்மதிப்பைப் பெற்றவர். பல இடங்களில் மற்ற துறை அமைச்சர்கள் பேச வேண்டிய இடத்தில் பாண்டியராஜன் பேசி லைக்ஸ் அள்ளினார்.

ஒருமுறை திமுக எம்.எல்.ஏ பழனிவேல் தியாகராஜன், அமெரிக்க உச்சரிப்பு கலந்த ஆங்கிலத்தில்  பேசியபோது அனைத்து அ.தி.மு.க உறுப்பினர்களும் விழிபிதுங்கினர். வழக்கமாக, உடனே எழுந்து பதில் கூறும் அமைச்சர்கள், ஏனோ அமைதி காத்தனர். அப்போது தோரணையாக எழுந்து தியாகராஜனின் ஆங்கில உரைக்கு, அவர் பாணியிலேயே புள்ளிவிவரங்களோடு பதில் சொன்னார் மாஃபா. இதை  ரசித்தார் ஜெயலலிதா.

பெண் நிருபர் ஒருவர் கல்வித்துறை அமைச்சராக பதவியேற்ற செங்கோட்டையனிடம் ஆங்கிலத்தில் கேள்வி கேட்ட போது அதற்கு பதில் சொல்ல முடியாமல் திக்குமுக்காடி தப்பித்து சென்றதை நாடு அறியும்.

பாண்டியராஜன் ஒரு அறிவு சார் அமைச்சர். துரதிருஷ்ட சூழல் காரணமாக, இப்போது நல்ல ஒரு கல்வி அமைச்சரை தமிழகம் இழந்துவிட்டது என்பது பட்டவர்த்தனமாக தெரிகிறது.

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்