ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் இடையே மோதல் முதன்மை கல்விஅதிகாரிகள் கூட்டம் ரத்து.
ஆசிரியர் தகுதி தேர்வான, 'டெட்' குறித்து,ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., ஏற்பாடு செய்திருந்த ஆலோசனை கூட்டம், திடீரென ரத்து செய்யப்பட்டது.'டெட்' தேர்வுக்கான சட்ட சிக்கல்கள் முடிவுக்கு வந்துள்ள நிலையில், நான்கு ஆண்டுகளுக்கு பின், மீண்டும், 'டெட்' தேர்வு நடத்த வாய்ப்புகள் உருவாகியுள்ளன.ஏப்ரலில், டெட் தேர்வை நடத்த, டி.ஆர்.பி.,
திட்டமிட்டுள்ளது.
இதற்காக, 15 லட்சம் விண்ணப்பங்கள் அச்சடிக்கப்பட உள்ளன. இந்நிலையில், தேர்வை நடத்துவது குறித்து, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளான, சி.இ.ஓ.,க்களுடன்ஆலோசனை நடத்த, டி.ஆர்.பி., தலைவர் விபு நாயர் முடிவு செய்தார். அனைத்து மாவட்ட, சி.இ.ஓ.,க்களும் நேற்று முன்தினம், சென்னைக்கு வர உத்தரவிடப்பட்டது.இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை செயலர் சபிதாவுக்கு, டி.ஆர்.பி., தரப்பில் தகவல் அளிக்கவில்லை என, கூறப்படுகிறது.பிப்., 6ல், பிளஸ் 2 செய்முறை தேர்வு நடக்க உள்ளதால், அந்த பணியை மேற்கொள்ளும்படி, சி.இ.ஓ.,க்களுக்கு, பள்ளிக்கல்வி செயலர் உத்தரவிட்டுள்ளார்.ஆனால், டி.ஆர்.பி.,யிலிருந்து திடீர் அழைப்பு வந்ததும், சி.இ.ஓ.,க்கள் சென்னைக்கு புறப்பட்டனர்.இது, தெரிய வந்த தும், 'சி.இ.ஓ.,க்கள் யாரும் சென்னைக்கு வரக் கூடாது; வீடியோ கான்பரன்ஸ் மூலம் கூட்டத்தை நடத்துங்கள்' என, டி.ஆர்.பி.,க்கு பள்ளிக் கல்வி செயலர் சபிதா கூறியுள்ளார்.அதை, அவர்கள் கண்டுகொள்ளவில்லை.
அதனால், பல சி.இ.ஓ.,க்கள்,சென்னைக்கு புறப்பட்டு விட்டனர்.அவர்கள் அனைவரையும், பாதி வழியில் ஊருக்கு திரும்பி செல்லும்படி, சபிதா உத்தரவிட்டுள்ளார். அவர்களும், அடித்து பிடித்து, ஊருக்கு போய் விட்டனர்.அப்படியிருந்தும், ஐந்து சி.இ.ஓ.,க்கள் சென்னைக்கு வந்துவிட்டனர். 'டி.ஆர்.பி., கூட்டத்தில் கலந்து கொள்ளக் கூடாது; உடனடியாக, ஊர் திரும்ப வேண்டும்' என, சபிதா தரப்பில் இருந்து மீண்டும் உத்தரவு வந்ததால், அவர்கள், விமானத்திலும், ரயிலிலும்,அவசரமாக தாங்கள்பணியாற்றும் ஊருக்கு சென்று விட்டனர். டி.ஆர்.பி., தலைவர் விபு நாயருக்கும், பள்ளிக் கல்வி துறை செயலர் சபிதாவுக்கும் முட்டல், மோதல் நீண்டகாலமாக உள்ளது.டி.ஆர்.பி., கமிட்டியில், பள்ளிக்கல்வி அதிகாரிகளும் உறுப்பினர்களாக உள்ளனர்.
ஆனால், அவர்களை புறக்கணித்து விட்டு, அவர்களுக்கு தெரியாமலேயே கூட்டத்தை நடத்த, டி.ஆர்.பி., தலைவர் முயற்சித்ததால், கூட்டம் ரத்து செய்யப்பட்டதாக, பள்ளிக்கல்வி செயலக வட்டாரத்தில் புகார் தெரிவிக்கப்படுகிறது.அதை, டி.ஆர்.பி., தரப்பு மறுக்கிறது. ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளுக்கு இடையே நடந்த மோதலால் தான், தேவையின்றி முதன்மை கல்வி அதிகாரிகள் அலைக்கழிக்கப்பட்டு விட்டதாக, அவர்கள் கூறுகின்றனர்.

No comments:
Post a Comment
குறிப்பு
1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..
அன்புடன்: கல்விக் கதிர்