February 15, 2017

போட்டித் தேர்வரா நீங்கள்? உங்களுக்குத்தான் இது! உங்களுக்கு மட்டும் தான்!

வருங்கால அரசு அலுவலர்களே*

ஒரு முக்கிய அறிவிப்பு!

போட்டித் தேர்வரா நீங்கள்?
உங்களுக்குத்தான் இது!
உங்களுக்கு மட்டும் தான்!

உங்களுக்கு சில சந்தேகங்கள் எழலாம்

*தமிழக ஆட்சி நிலையில் அசாதாரணச் சூழல் நிலவுகிறதே? இது நம் தேர்வை பாதிக்குமோ!*



பாதிக்காது!

அரசில் என்ன குளறுபடி நடந்தாலும் சரி, ஒரு முறையான ஆட்சி நடத்தப்பட்டே தீரும்! ஏனென்றால் இது மக்களாட்சி நாடு.இதுவெல்லாம் நாம் அரசியலமைப்புப் பாடத்தின் பொழுது படித்தவைகள் தாம். அரசு என்றைக்கும் மாறலாம் அது நமக்குத் தேவையேயில்லாத ஒன்று! ஏனென்றால் எத்தனை அரசு மாறினாலும் அரசாங்கம் மாறாது. ஆகவே அரசாங்கம் நடப்பதற்கு வேலை செய்ய அரசு அலுவலர்கள் தேவை. எனவே இதைப் படித்துக் கொண்டிருக்கும் வருங்கால அரசு அலுவலர்களே நம்பிக்கையுடன் செயலாற்றுங்கள்.

*பணியிடங்கள் குறித்த ஆண்டு அறிக்கையில் குறைவான காலியிடங்கள் உள்ளதே! அதனால் படிப்பதைத் தொடர்வோமா? வேண்டாமா?*

இந்தக் கவலை எல்லாம் உங்களுக்கு வரவே கூடாது!

50 பணியிடம் இருந்தாலும், 50,000 பணியிடம் இருந்தாலும் நமக்குத் தேவை 1 பணியிடம் தான்!

நீங்கள் 2 பணியிடத்தைத் தேர்வு செய்ய முடியுமா? கிடையாது தானே!

பின் எதற்கு வீண் கவலை?
விட்டொழியுங்கள் வீண் கவலைகளை.

அதே போல, எந்தத் தேர்வும் அறிவிப்பில் குறித்தபடி நடத்தப்படுவது கிடையாது! அறிவிக்கையில் கொடுத்ததை விட சற்றுக் கூடுதலான பணியிடம் ஒவ்வொரு ஆண்டும் ஒதுக்கப்படுகிறது. எனவே இந்த ஆண்டு அறிக்கை குறித்தபயம் தேவையற்றது.

*பணியிடம் குறைவதால் போட்டியிடுதலின் கடினத் தன்மை கூடுமே! என்ன செய்ய?*

உங்களுக்கு ஒன்று தெரியுமா?

இப்பொழுது நீங்கள் என்ன நினைப்பில் இருக்கிறீர்களோ அதே போலத்தான் அனைத்துப் போட்டித் தேர்வர்களும் இருப்பார்கள்.

பலரோ, படித்தது போதும் முயற்சியைக் கைவிட்டுவிடலாம் என்பார்கள்.

சிலர் தான் படித்ததைத் திரும்பத் திரும்பப் படித்து வாய்ப்பிற்காகக் காத்திருப்பார்கள்!

அந்த சிலரில் நீங்களும் இருந்தீர்களேயானால்
வெற்றி நிச்சயமாய் உங்களுக்குத்தான்.

ஆகவே,

*எதிலும் மனம் தளர விடாதீர்கள்!*

*விட்டு விலகும் எண்ணம் இருந்தால், இந்த எண்ணத்தை முதலில் விட்டு விலகுங்கள்*


முயற்சியுடன் பயிற்சி செய்யுங்கள்

வருத்தங்களைத் தூக்கி எறியுங்கள்!
வருங்காலம் உங்கள் கையில்!!

பொறுமையுடன் படித்துக் கொண்டிருங்கள்.

இன்றைய போட்டித் தேர்வர்களாகிய நீங்கள்
வருங்கால அரசு அலுவலர்களாவது உறுதி!!

எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்...

vijay rishva

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்