February 04, 2017

9 மாதம் முதல் 15 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு தட்டம்மை–ரூபெல்லா தடுப்பூசி 6–ந்தேதி முதல் 28–ந்தேதி வரை சென்னையில் சிறப்பு முகாம்கள்..


9 மாதம் முதல் 15 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு ‘தட்டம்மை–ரூபெல்லா’ தடுப்பூசி வழங்கப்படும் என பெருநகர சென்னை மாநகராட்சி கமி‌ஷன் அறிவித்துள்ளது. இதற்காக சென்னையில் வருகிற 6–ந்தேதி முதல் 28–ந்தேதி வரை சிறப்பு முகாம்கள் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த தடுப்பூசி மிகவும் பாதுகாப்பானது. இதன் மூலம் குழந்தைகளுக்கு வாழ்நாள் முழுவதும் தட்டமை மற்றும் ரூபெல்லா நோயிலிருந்து பாதுகாப்பு கிடைக்கும். இதனால் அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகள் கூட பிறவிக் குறைபாடுகளுடன் பிறப்பது தடுக்கப்படுகிறது.

இந்த முகாம் முதல் இரண்டு வாரத்தில் அனைத்து பள்ளிகளிலும், மூன்றாம் வாரத்தில் அங்கன்வாடி மையங்கள் மற்றும் பள்ளிக்கு செல்லாத குழந்தைகளுக்கு அவர்கள் வசிக்கும் பகுதிகளில் உள்ள தடுப்பூசி மையங்களிலும் நடைபெறவுள்ளது.

இறுதியாக நான்காவது வாரத்தில் விடுபட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி வழங்கிட நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்