February 28, 2017

குழப்பமான நிலையில் மே 7-ல் நீட் தேர்வு : விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்..

சென்னை: எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் படிப்புகளுக்கான நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாளாகும். நாடு முழுவதுமுள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகள், நிகர்நிலை பல்கலைகழகங்களில் உள்ள எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் படிப்புகளுக்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வை மத்திய அரசு
கட்டாயமாக்கியுள்ளது. இதனையடுத்து இந்த ஆண்டு நீட் தேர்வு மே மாதம் 7-ம் தேதியன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக ஆன்லைன் மூலம் விண்ணபிக்கும் முறை கடந்த ஜனவரி மாதம் 31-ம் தேதி துவங்கியது. விண்ணபிக்க நாளை கடைசி நாள் என மத்திய இடைநிலை கல்வி வாரியம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து மாணவர்கள் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்து வருகின்றனர்.

இதனிடையே நீட் தேர்விலிருந்து தமிழக அரசு மருத்துவம் மற்றும் பல் மருத்துவ கல்லூரிகளுக்கு விலக்கு பெறுவதற்கான சட்ட மசோதாவை பேரவயைில் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டது. இந்த சட்ட மசோதா குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க கோரும் சட்ட மசோதாவிற்கு இன்னும் பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளிக்கவில்லை. அரசியல் கட்சியினரின் எதிர்ப்பை அடுத்து முதல்வர் பழனிசாமி, டெல்லியில் பிரதமரிடம் இது குறித்து வலியுறுத்தினார்.

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்