February 21, 2017

2017 ஏப்ரல் 1 முதல் தமிழ்நாட்டில் மின்னணு குடும்ப அட்டைகள் (ஸ்மார்ட் ரேஷன் கார்டு) வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என மாநில உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தகவல்.



💳 தமிழகத்தில் நடைமுறையில் உள்ள அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் முழுமையான ஆதார் எண் பதிவு செய்யப்பட்டு, வரும் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் புதிய மின்னணு ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்தார்.

💳 சென்னை சேப்பாக்கத்திலுள்ள எழிலகம் கூட்டரங்கில் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அலுவலர்களுக்கான மாநில அளவிலான கலந்தாய்வுக்கூட்டம், உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தலைமையில் நடைபெற்றது.

💳 இக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் ஆர்.காமராஜ், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 1-ஆம் தேதி முதல் தேசிய உணவு பாதுகாப்பு சட்டம் - 2013 நடைமுறைபடுத்தப்பட்டு வருவதாகவும், வரும் ஏப்ரல் 1-ஆம் தேதி புதிய மின்னணு ஸ்மார்ட் கார்டுகள் வழங்குவதற்காக பணிகள் துரிதமாக நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.

💳 மேலும், குடும்ப அட்டைகளில் பெயர், சேர்த்தல், நீக்குதல் உள்ளிட்டவை மீது குறைதீர் முகாம்களில் சுமார் 6 லட்சம் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாகவும் கூறினார்.


No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்