February 23, 2017

whatsApp ல் நாம் கவனிக்காமல் இருக்கும் பல அம்சங்கள்.



📱 whatsApp ல் நாம் கவனிக்காமல் இருக்கும் பல அம்சங்கள். 👇


📱 நீங்கள் உங்களின் வாட்ஸ்ஆப் அக்கவுண்ட்டை அதிகமாக பாதுகாக்க விரும்பினால் டூ-ஸ்டெப் வெரிஃபிக்கேஷன் வைத்துக் கொள்ளலாம். இந்த முறையின் மூலம் உங்கள் தொலைப்பேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றைக்கொண்டு 6 இலக்க கடவு எண் ஒன்றினை உருவாக்கி உங்கள் வாட்ஸ் ஆப் கணக்கினை பாதுகாப்பாக வைத்துக்கொள்ளலாம். உங்கள் போன் எதிர்பாராத விதமாக தொலைந்து போனால் வேறு எவரும் பயன்படுத்தாத வகையில் நாம் பாதுகாக்க இம்முறை உதவும்.

📱 பார்க்காமல் விட்ட வாட்ஸ்ஆப் குரூப் மெசேஜ் அல்லது தனிப்பட்ட ஏதேனும் ஓர் மெசெஜ்க்கு பதிலளிக்க எந்த மெசஜ்க்கு பதிலளிக்க வேண்டுமோ அதனை அழுத்திப்பிடித்து பின்பக்கம் வரக்கூடிய பட்டனை செலக்ட் செய்து அதற்கான பதிலை அனுப்பலாம்.

📱 வாட்ஸ்ஆப் குரூப்பில் உங்கள் மெசேஜ் எத்தனைப் பேரால் பார்க்கப்பட்டது எனக் கண்டறிய மெசேஜ் பற்றிய தகவல்கள் வேண்டுமோ அந்த மெசேஜ்யினை அழுத்திப்பிடித்து இப்போது திரையில் காட்டும் 'i' என்ற குறியினை செலக்ட் செய்தால் அந்த குறிப்பிட்ட மெசேஜ் எத்தனைப் பேரால் பார்க்கப்பட்டது எனக் கண்டறியலாம்.

📱 வாட்ஸ்ஆப் ஆடியோ பொதுவாக பிளே செய்தால் ஸ்பீக்கர் முறையில் ஒலிக்கிறது என்றால் உடனே மொபைலை உங்கள் காதின் அருகே கொண்டு சென்றால் தானாகவே ஸ்பீக்கர் மோடில் இருந்து சாதாரண நிலையில் ஒலிக்கும்.

📱 வாட்ஸ்ஆப்பில் நமக்கு தேவையான குறியீடுகளை ஏற்ற நேரத்தில் பயன்படுத்திக்கொள்ளலாம். உதாரணமாக ழூபுழழன ஆழசniபெழூ இதனைப்போன்று நட்சத்திரக் குறியீடுகள் இடுவதன் மூலம் நாம் முக்கியமானதாக குறிப்பிட நினைப்பதை பிறருக்கு உணர்த்தலாம்.

📱 வாட்ஸ்ஆப் குரூப்பில் தனியாக எவரேனும் குறிப்பிட்ட நபருக்கு மெசேஜ் அனுப்புகையில், @ குறியிட்டு அனுப்புவதன் மூலம் அந்த நபரின் கவனத்திற்கு நாம் எளிதில் கொண்டு செல்லலாம்.

📱 ஷேர் செய்யப்படும் வீடியோக்களை தரவிறக்கம் செய்யும்போதே ப்ளே செய்து பார்க்கலாம். இதன்மூலம் முழு வீடியோவையும் தரவிறக்கும் செய்யும் வரை காத்திருக்காமல் ப்ளே செய்து பார்க்க முடியும்.

டிக்... டிக் !

📱 ஒரே ஒரு வெளிறிய டிக் அடையாளம், உங்கள் செய்தி வெற்றிகரமாக, உங்கள் தொலைபேசியிலிருந்து அனுப்பப்பட்டுவிட்டது எனக் காட்டுகிறது. ஆனால், அது இன்னும் அனுப்பப்பட்டவருக்குத் தரப்படவில்லை என்று பொருள்.

இரண்டு வெளிறிய டிக் டிக் :

📱 வெளிறிய வண்ணத்தில் இரண்டு டிக் அடையாளங்கள் இருந்தால், உங்கள் செய்தி சென்றடைய வேண்டிய ஸ்மார்ட் போனை அடைந்துவிட்டது. ஆனால், அதனைப் படிக்க வேண்டியவர் இன்னும் படிக்கவில்லை. (நீங்கள் செய்தி அனுப்பிய நபர், தான் படித்துவிட்டதனை, செய்தி அனுப்பியவர் அறியக்கூடாத வகையில், முடக்கி வைத்திருந்தாலும், அவர் படித்ததை நாம் அறிய முடியாது. இரண்டு வெளிறிய டிக் அடையாளங்கள் இருந்து கொண்டுதான் இருக்கும்.)

📱 நீங்கள் வாட்ஸ்ஆப்பில், குழு ஒன்றின் உறுப்பினராக இருந்து, தகவல் ஒன்று அந்தக் குழுவில் அனுப்பப்பட்டால், அந்தக் குழுவில் உள்ள அனைவருக்கும் அத்தகவல் சென்ற பின்னரே, இரண்டு வெளிறிய டிக் அடையாளங்கள் காட்டப்படும்.

இரண்டு நீல நிற டிக் :

📱 இரண்டு நீல நிற டிக் அடையாளங்கள், குறிப்பிட்ட அந்த செய்தி படிக்கப்பட்டுவிட்டதனை உறுதிப்படுத்துகிறது. தகவல் பெற்றவர் அதனைப் படித்தாரோ இல்லையோ, அதனைத் திறந்திருந்தாலே, அது படிக்கப்பட்டதாகக் காட்டப்படும்.

📱 குழுவில், அனைவரும் குறிப்பிட்ட தகவலைப் பெற்று, திறந்து படித்திருந்தால் தான், இரண்டு நீல நிற டிக் அடையாளம் காட்டப்படும்.

2 comments:

sathish said...

We Already Known This...No Special Ur Msg...

1) Long Press - Audoi Msg -Hold And Release -Its Old....

# Select Media- Audio- Record With Watsapp - Speach- Send - Without Disturbs- It's New...

2) Type Msg - Old...

# In Space Button Left Side ? Button- Long Press Change And Select Speaker Buuton To Speech- Automatically text Type In Box.. So No Need To Type...

3) U Can Change Others DP... Also U Can Hack &See Others Watsapp Using QR Code...
Chat Option-Right Side-Watsapp Web-Scan QR Code...

So Many Options Are Available In Watsapp...

kalvikathir said...

Thank u Sathish sir

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்