வருமான வரியை நிர்ணயிக்கப்பட்ட கால கெடுவிற்குள் செலுத்தாவிட்டால் அல்லது கால தாமதமாக செலுத்தினால் ரூ.5000 முதல் ரூ.10,000 வரை அபராதம் விதிக்கப்படும் என மத்திய அரசு நேற்று தாக்கல் செய்த மத்திய பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மத்திய அரசு நேற்று தாக்கல் செய்த பட்ஜெட்டில், வருமான வரி உச்சவரம்பில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை.
ஆனால், வருமான வரி செலுத்த வேண்டிய தேதிக்கு பிறகு, அதேசமயம் டிசம்பர் 31 ம் தேதிக்கு முன் வரியை செலுத்தினால் ரூ.5000 அபராதம் விதிக்கப்படும். ஒருவேளை டிசம்பர் 31 ம் தேதிக்கு பிறகு வரியை செலுத்தினால் அபராத தொகை ரூ.10,000 வரை அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அபராதம் ரூ.5 லட்சத்திற்கும் குறைவான வருமானம் உடையவர்களுக்கு பொருந்தாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் ரூ.5 லட்சத்திற்கும் குறைவான வருமானம் உடையவர்கள் தாமதமாக வருமான வரி செலுத்தினால் ரூ.1000 க்கு மிகாமல் அபராதம் விதிக்கப்படும்.
No comments:
Post a Comment
குறிப்பு
1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..
அன்புடன்: கல்விக் கதிர்