January 27, 2017

NMMS :உதவித்தொகை பெற நாளை எழுத்து தேர்வு..


அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு, தேசிய வருவாய் வழி மற்றும் படிப்பு உதவித்தொகை திட்டத்தின் மூலம், தேர்வு நடத்தப்பட்டு, "ஸ்காலர் ஷிப்' வழங்கப்படுகிறது.
இத்தேர்வெழுத, ஏழாம் வகுப்பில், 55 சதவீதம் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்; பெற்றோரின் ஆண்டு வருமானம், ஒரு லட்சத்துக்கு, 50
ஆயிரத்துக்கும் குறைவாக இருக்க வேண்டும்.அவ்வகையில், திருப்பூர் மாவட்டத்தில், 5,223 பேர், நடப்பு ஆண்டுக்கான "ஸ்காலர் ஷிப்' பெறுவதற்கான எழுத்து தேர்வை எழுதவுள்ளனர். இத்தேர்வு, நாளை நடைபெறுகிறது. மாவட்டத்தில், 20 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.இத்தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு, அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு, மாதம், 500 ரூபாய் உதவித் தொகையாக வழங்கப்படும்.

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்