January 30, 2017

Breaking News: தமிழகத்தின் ஜல்லிக்கட்டு சட்டத்திற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்கினார்.



🐮 ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு வசதியாக தமிழக அரசு கொண்டு வந்துள்ள சட்டத்திற்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி இன்று ஒப்புதல் அளித்துள்ளார்.



🐮 காட்சிப்படுத்தப்படும் விலங்குகள் பட்டியலில் இருந்து காளைகளுக்கு விலக்கு அளித்து மத்திய அரசு கொண்டு வந்த அறிவிப்பாணையை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது.

🐮 இதையடுத்து, தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.

🐮 இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளிப்பதும் தள்ளி போனது.

🐮 இதனால், தமிழக இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் ஜனவரி 17 ம் தேதி முதல், 23ம் தேதி வரை சென்னை மெரினா, மதுரையில் அலங்காநல்லூர் உள்ளிட்ட பல இடங்களில் போராட்டம் நடத்தினர்.

🐮 இதையடுத்து மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, தமிழக அரசு அவசர சட்டம் கொண்டு வந்தது.

🐮 ஜனவரி 23ல் இதற்கான சட்டமுன்வடிவு தமிழக சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டு நிரந்த சட்டமாக நிறைவேற்றப்பட்டது.

🐮 இதையடுத்து, இந்த சட்டத்தை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு ஆளுநர் வித்தியாசாகர் ராவ் அனுப்பினார்.

🐮 மிருகவதை தடுப்பு சட்டம் - 217 ( தமிழ்நாடு திருத்தம்) என்ற சட்டத்திற்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி இன்று (ஜனவரி 30)  ஒப்புதல் அளித்தார்.

🐮 ஜல்லிக்கட்டு தொடர்பான மனுக்கள், நாளை( 31.01.2017) உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்