🔴 📝 ஜனவரி 26 முதல் பெப்சி, கோக் உள்ளிட்ட வெளிநாட்டு குளிர்பானங்களை விற்க மாட்டோம் என்று வணிகர் பேரவை தலைவர் த வெள்ளையன் அறிவித்துள்ளார்.
🔵 📝 மார்ச் 1 முதல் பெப்சி, கோக் உள்ளிட்ட வெளிநாட்டு குளிர்பானங்களை விற்பனை செய்ய மாட்டோம் என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு அறிவித்துள்ளது.
🍁 தமிழகத்தில் உள்ள சில திரையரங்குகளும் இதே முடிவை அறிவித்து, பெப்சி, கோக் நிறுவனங்களுக்கு பேரதிர்ச்சியைக் கொடுத்துள்ளன.
🐮 மாட்டுப் பொங்கலன்று ஆரம்பித்தது ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டம்.
🐮 ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க வேண்டும், அதற்கு ஒரு அவசரச் சட்டம் கொண்டு வரவேண்டும் என்றுதான் முதலில் ஆரம்பித்தது இந்தப் போராட்டம்.
ஆனால் அதுவோ, அந்நிய பொருள்களை பகிஷ்காரம் செய்யும் போராகவும் மாறியுள்ளது.
🐮 பீட்டா என்ற வெளிநாட்டு நிறுவனம்தான் இன்று ஜல்லிக்கட்டுக்கு பெரும் வில்லனாக நிற்கிறது.
🐮 எனவே அந்த பீட்டா நாட்டைச் சேர்ந்த நிறுவனங்கள் தயாரிக்கும் பெப்சி, கோக் போன்ற எந்த குளிர்பானத்தையும் இனி விற்கக் கூடாது, வாங்கவும் கூடாது என போராட்டக் களத்தில் உள்ள இளைஞர்கள் அறைகூவல் விடுத்துள்ளனர்.
🐮 அதுமட்டுமல்ல, பெப்சி, கோக், பான்டா போன்ற பானங்களை உடைத்து தரையில் கொட்டிவிட்டு, ஒரு டம்ளர் தண்ணீரைக் குடித்து இந்த பானம் போதும் என்று வீடியோவில் பதிவு செய்து வெளியிட்டுள்ளனர்.
🐮 இந்த காட்சிகள் மக்கள் மனதில் பெரும் மாற்றத்தை உருவாக்கியுள்ளது.
இதைத் தொடர்ந்து, பெப்சி, கோக் பானங்களை இனி விற்க மாட்டோம் என பல வணிகர்கள் தன்னிச்சையாக அறிவித்துள்ளனர்.
🍀 சில ஹோட்டல்களில் இதற்கான அறிவிப்புப் பலகையே வைத்துள்ளனர்.
🍁 இதைக் கண்ட தமிழ்நாடு வணிகர் பேரவை, வரும் ஜனவரி 26-ம் தேதி முதல் தமிழகத்தில் கோக், பெப்சி, பான்டா உள்ளிட்ட அந்நிய நாட்டு குளிர்பானங்கள் விற்கப்படாது என்று அறிவித்துள்ளது.
🍁 வணிகர் பேரவை தலைவர் த. வெள்ளையன் இதுகுறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
🔴 அடுத்து பெப்சி, கோக் பானங்கள் அதிகம் விற்பனையாகும் திரையரங்குகள் சிலவும் இந்த பானங்களை விற்கப் போவதில்லை என அறிவித்துள்ளன.
🔵 ராமநாதபுரத்தைச் சேர்ந்த டி சினிமாஸ் உரிமையாளர் தினேஷ் பாபு இதனை வெளிப்படையாக அறிவித்துள்ளார்.
🔴 "இனி உள்ளூர் பானங்களை மட்டுமே விற்கப் போகிறேன். குறிப்பாக இளநீர், மோர் போன்ற பானங்களை தியேட்டரில் விற்க ஆர்வமாக உள்ளேன். பாப்கார்ன் போன்ற பொருட்களில் வெளிநாட்டு தயாரிப்புகளையும் நிறுத்திவிட்டு அதற்கு இணையான உள்ளூர் தயாரிப்புகளை பயன்படுத்த பரீசிலித்து வருகிறோம்.
🔵 படிப்படியாக ,வெளிநாட்டு தயாரிப்புகளை முற்றிலுமாக நிறுத்த முடிவெடுத்துள்ளதற்கு, ரசிகர்கள் தொடர்ந்து ஒத்துழைப்பு அளிப்பார்கள் என நம்புகிறேன்," என்றார்.
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
📝 மார்ச் 1 முதல் பெப்சி, கோக் உள்ளிட்ட வெளிநாட்டு குளிர்பானங்களை விற்பனை செய்ய மாட்டோம் என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு அறிவித்துள்ளது.
🍁 இதுகுறித்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்ரமராஜா, விழுப்புரத்தில் நிருபர்களிடம் பேசியபோது, பெப்சி, கோககோலா உள்ளிட்ட வெளிநாட்டு குளிர்பானங்கள் விற்பனையை மார்ச் 1ம் தேதி முதல் நிறுத்த உள்ளோம்.
🔶 உள்நாட்டு குளிர்பானங்கள் விற்பனையை ஊக்குவிப்போம் என்றார்.
🔷 பீட்டா என்ற அமெரிக்க அமைப்பு தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளதால், அந்த நாட்டு குளிர்பானங்களை குடிக்க மாட்டோம் என ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டக்காரர்கள் கோஷமாக முன் வைத்தனர்.
🔶 அவர்கள் கருத்துகளுக்கு மதிப்பளிக்கும் வகையில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
🐮 ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டத்தால் நிகழ்ந்த மற்றொரு நன்மையாக இது பார்க்கப்படுகிறது.
🔷 சுமார் 10 வருடங்கள் முன்புவரை உள்ளூரில் குளிர்பானம் தயாரித்து விற்பனை செய்து பல வியாபாரிகள் பிழைப்பு நடத்தி வந்தனர். சோடாக்களையும் விற்று வந்தனர்.
🔶 ஆனால் இப்போது பன்னாட்டு குளிர்பானம் வந்த பிறகு மொத்தமாக உள்ளூர் குடிசை தொழில்கள் அழிந்துபோயின என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment
குறிப்பு
1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..
அன்புடன்: கல்விக் கதிர்