🌺 ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தலால் பிப்ரவரி 1ம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ள மத்திய பட்ஜெட் தள்ளிப்போகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
🌺 நாட்டின் மிகப்பெரிய மாநிலமான உத்தரப்பிரதேசம், பஞ்சாப், மணிப்பூர், உத்தராகண்ட் மற்றும் கோவா ஆகிய ஐந்து மாநில சட்டப்பேரவைகளுக்கு பிப்ரவரி 4 முதல் மார்ச் 8 வரை தேர்தல் நடைபெற உள்ளது.
🌺 இதையடுத்து தேர்தல் நடைபெற உள்ள மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன.
🌺 பிப்ரவரி 1ம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ள மத்திய பட்ஜெட், தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறுவது போல இருக்கலாம் என்பதால் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதை ஒத்திவைக்க வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன.
🌺 தேர்தல் நியாயமாகவும் தூய்மையாகவும் நடைபெற வேண்டுமெனில் பிப்ரவரி 1ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யக் கூடாது என பகுஜன் சமாஜ் கட்சி கூறியுள்ளது.
🌺 தேர்தல் நடப்பது மாநில சட்டப்பேரவைகளுக்கே என்ற நிலையில், தேர்தல் நடத்தை விதிமுறைகள் மத்திய அரசால் தாக்கல் செய்யப்படும் பொதுபட்ஜெட்டுக்கு இடையூறாக இருக்காது என்றும் ஒரு கருத்து நிலவுகிறது.
🌺 பட்ஜெட்டில் தேர்தல் நடைபெறும் மாநிலங்களின் பெயரைக் குறிப்பிட்டு திட்டங்கள் அறிவிக்கப்படாமல் இருக்கும் வரை தேர்தல் விதிகளால் பட்ஜெட்டுக்கு பாதிப்பில்லை என்று கூறப்படுகிறது.
🌺 இது தொடர்பாக பரிசீலித்து விரைவில் முடிவெடுக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

No comments:
Post a Comment
குறிப்பு
1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..
அன்புடன்: கல்விக் கதிர்